திருப்புகழ் 1113 மைச்சுனமார் மாமன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1113 Maichchunamarmaman

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான – தனதான

மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
மக்களுமா றாத – துயர்கூர

மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
வைத்தவர்தா மேக – மதிமாய

நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு
நெட்டளவாம் வாதை – யணுகாமுன்

நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
நித்தலும்வாழ் மாறு – தருவாயே

நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத
னற்றவர்தா நாட – விடையேறி

நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு
நற்றுணைவா ஞால – மிகவாழப்

பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
பத்தியதா மாறு – முகநாளும்

பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத
பத்திசெய்வா னாடர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான – தனதான

மைச்சுனமார் மா மனைச்சியு(ம்) மாதாவு(ம்)
மக்களும் மாறாத – துயர் கூர

மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ
வைத்தவர் தாம் ஏக – மதி மாய

நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்)
நெட்டு அளவாம் வாதை – அணுகா முன்

நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி
நித்தலும் வாழ்மாறு – தருவாயே

நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன்
நல் தவர் நாட – விடை ஏறி

நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு
நல் துணைவா ஞாலம் – மிக வாழப்

பச்செனு நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக
பத்தியது ஆம் ஆறு – முக நாளும்

பக்ஷமும் மேலாய் ஷடாக்ஷர சூழ் பாத
பத்தி செய் வான் நாடர் – பெருமாளே.

English

maicchunamAr mAma naicchiyumA thAvu
makkaLumA RAtha – thuyrkUra

mattilathOr theeyi likkudilthAn vEva
vaiththavarthA mEka – mathimAya

nicchayamAy nALu mittoruthU thEvu
nettaLavAm vAthai – yaNukAmun

nekkurukA njAna mutRunathA LOthi
niththalumvAzh mARu – tharuvAyE

nacchaNaimEl vAzhu macchuthanAl vEtha
natRavarthA nAda – vidaiyERi

naRputhalvA cUrar pattidavE lEvu
natRuNaivA njAla – mikavAzhap

pacchenuneeL thOkai meyppariyUr pAka
paththiyathA mARu – mukanALum

pakshamumE lAysha daksharasUzh pAtha
paththiseyvA nAdar – perumALE.

English Easy Version

maicchunamAr mA manaicchiyu(m) mAthAvu(m)
makkaLum mARAtha – thuyar kUra

mattu ilathu Or theeyil ik kudil thAn vEva
vaiththavar thAm Eka – mathi mAya

nicchayamAy nALum ittu oru thUthu Evu(m)
nettu aLavAm vAthai – aNukA mun

nekku urukA njAnam utRu una thAL Othi
niththalum vAzhmARu – tharuvAyE

nacchu aNai mEl vAzhum acchuthan nAl vEthan
nal thavar thA(m) nAda – vidai ERi

nal puthalvA cUrar pattida vEl Evu
nal thuNaivA njAlam – mika vAzhap

pacchenu neeL thOkai meyppari Ur pAka
paththiyathu Am ARu – muka nALum

pakshamum mElAy shadAkshara sUzh pAtha
paththi sey vAn nAdar – perumALE