திருப்புகழ் 1115 மக்கள் ஒக்கல் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1115 Makkalokkal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன – தனதான

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ – ரனைவோரும்

வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு – மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு – முருகாதே

புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ – தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு – மதிசூடி

சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு – மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய் – வடிவேலா

கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன – தனதான

மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர்
மற்றும் உற்ற குரவர் – அனைவோரும்

வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும்
மட்டும் அற்றுப் பெருகும் – அடியாரும்

புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது
பொய்க்கு மெய்க்குச் செயலும் – உருகாதே

புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு
புத்தி மெத்தத் தருவது – ஒரு நாளே

செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு
செ(க்)கம் உற்றச் சலமும் – மதி சூடி

சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த
முத்திச் சிவமும் – அருள்வோனே

கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரரை
கொத்தின் ஒக்கக் கொலை செய் – வடிவேலா

கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது
குத்தி வெட்டிப் பொருத – பெருமாளே.

English

makkaLok katRerivai pakkamik kaththuNaivar
matRumut Rakkurava – ranaivOrum

vaiththasep piRpaNamum rathnamuth thiRpaNiyu
mattumat Rupperuku – madiyArum

pukkuthuk kiththerikaL thaththavaik kappukuthu
poykkumeyk kuccheyalu – murukAthE

pushpamit tukkaruNai naRpathath thaipparavu
puththimeth thaththaruva – thorunALE

sekkarkat Raicchadaiyil mikkakok kiRchiRaku
sekkamut Racchalamu – mathicUdi

siththamut RuththeLiya meththameth thaththikazhu
siththamuth thicchivamu – maruLvOnE

kokkuRup pukkodumai niRkumvat taththasurai
koththinok kakkolaisey – vadivElA

kotRavet Ripparisai yottiyet ticchiRithu
kuththivet tipporutha – perumALE.

English Easy Version

makkaL okkal therivai pakka mikkath thuNaivar
matRum utRa kuravar – anaivOrum

vaiththa seppiR paNamum rathnam muththil paNiyum
mattum atRup perukum – adiyArum

pukku thukkiththu erikaL thaththa vaikkap pukuthu poykku
meykkuc cheyalum – urukAthE

pushpam ittuk karuNai nal pathaththaip paravu
puththi meththath tharuvathu – oru nALE

sekkar katRaic chadaiyil mikka kokkin siRaku
se(k)kam utRac chalamum – mathi cUdi

siththam utRuth theLuiya meththa meththath thikazhu(m) siththa
muththic chivamum – aruLvOnE

kokku uRuppuk kodu mai niRkum vattaththu asurai
koththin okkak kolai sey – vadivElA

kotRam vetRip parisai otti ettis siRithu
kuththi vettip porutha – perumALE