திருப்புகழ் 1116 உற்பாதம் பூ (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1116 Urtpathampu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

உற்பா தப்பூ தக்கா யத்தே
யொத்தோ டித்தத் – தியல்காலை

உட்பூ ரித்தே சற்றே சற்றே
யுக்கா ரித்தற் – புதனேரும்

அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
லப்பா வித்துத் – திரிவேனுக்

கப்பா சத்தா லெட்டா அப்பா
லைப்போ தத்தைப் – புரிவாயே

பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
கப்போய் முட்டிக் – கிரிசாடிப்

புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
பொட்டா கக்குத் – தியவேலா

முற்பா டப்பா டற்றா ருக்கோர்
முட்கா டற்கப் – பொருளீவாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

உற்பாதம் பூ தக் காயத்தே
ஒத்து ஓடித் தத்து – இயல் காலை

உள் பூரித்தே சற்றே சற்றே
உக்காரித்து அற்புதன் – நேரும்

அற்பாய் இல் தாய் நிற்பாரைப் போலப்
பாவித்துத் – திரிவேனுக்கு

அப்பாசத்தால் எட்டா அப்பாலைப்
போதத்தைப் – புரிவாயே

பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப்
போய் முட்டிக் – கிரி சாடி

புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர்
பொட்டாகக் – குத்திய வேலா .

முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர்
முள் காடு அற்கப் – பொருள் ஈவாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே

English

uRpA thappU thakkA yaththE
yoththO diththath – thiyalkAlai

utpU riththE satRE satRE
yukkA riththaR – puthanErum

aRpA yitRAy niRpA raippO
lappA viththuth – thirivEnuk

kappA saththA lettA appA
laippO thaththaip – purivAyE

poRpAr poRpAr puththE LirkkA
kappOy muttik – kirisAdip

pukkA zhicchUzh kittA kicchUr
pottA kakkuth – thiyavElA

muRpA dappA datRA rukkOr
mutkA daRkap – poruLeevAy

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

uRpAtham pUthak kAyaththE
oththu Odith thaththu – iyal kAlai

uL pUriththE satRE satRE
ukkAriththu aRputhan – nErum

aRpAy il thAy niRpAraip pOlap
pAviththuth – thirivEnukku

appAsaththAl ettA appAlaip
pOthaththaip – purivAyE

poRpu Ar pon pAr puththELirkkAkap
pOy muttik – kiri sAdi

pukku AzhicchUzh kittAkic chUr
pottAkak kuththiya – vElA

mun pAdap pAdu atRArukku Or
muL kAdu aRkap – poruL eevAy

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.