திருப்புகழ் 1117 எற்றா வற்றா (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1117 Etravatra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

எற்றா வற்றா மட்டா கத்தீ
யிற்காய் செக்கட் – பிறைவாளே

யிற்றார் கைப்பா சத்தே கட்டா
டிக்கோ பித்துக் – கொடுபோமுன்

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
ரொட்டோம் விட்டுக் – கழியீரென்

றுற்றோ துற்றே பற்றா நிற்பா
ரக்கா லத்துக் – குறவார்தான்

பற்றார் மற்றா டைக்கே குத்தா
பற்றா னப்பிற் – களைவோனே

பச்சே னற்கா னத்தே நிற்பாள்
பொற்பா தத்திற் – பணிவோனே

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத் – துறைவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

எற்றா வற்றா மட்டாகத் தீயில்
காய் செம் கண் – பிறைவாள்

எயிற்றார் கைப் பாசத்தே கட்டு ஆடிக்
கோபித்துக் – கொடுபோமுன்

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார்
ஒட்டோம் விட்டுக் – கழியீர் என்று

உற்று ஓதுற்றே பற்றா நிற்பார்
அக் காலத்துக்கு உறவு – ஆர்தான்

பற்றார் மல் தாடைக்கே குத்தா
பல் தான் அப்பில் – களைவோனே

பச்சு ஏனல் கானத்தே நிற்பாள்
பொற பாதத்திற் – பணிவோனே

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத் – துறைவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே

English

etRA vatRA mattA kaththee
yiRkAy sekkat – piRaivALE

yitRAr kaippA saththE kattA
dikkO piththuk – kodupOmun

utRAr petRAr sutRA niRpA
rottOm vittuk – kazhiyeeren

RutRO thutRE patRA niRpA
rakkA laththuk – kuRavArthAn

patRAr matRA daikkE kuththA
patRA nappiR – kaLaivOnE

pacchE naRkA naththE niRpAL
poRpA thaththiR – paNivOnE

mutRA vatRA meyppO thaththE
yutRAr siththath – thuRaivOnE

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

etRA vatRA mattAkath theeyil
kAy sem kaN – piRaivAL

eyitRAr kaip pAsaththE kattu Adik
kOpiththuk – kodupOmun

utRAr petRAr sutRA niRpAr
ottOm vittuk – kazhiyeer enRu

utRu OthutRE patRA niRpAr
ak kAlaththukku uRavu – ArthAn

patRAr mal thAdaikkE kuththA
pal thAn appil – kaLaivOnE

pacchu Enal kAnaththE niRpAL
poR pAthaththiR – paNivOnE

mutRA vatRA meyppO thaththE
yutRAr siththath – thuRaivOnE

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.