திருப்புகழ் 1118 செட்டாகத் தேனை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1118 Settagaththenai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

செட்டா கத்தே னைப்போ லச்சீ
ரைத்தே டித்திட் – பமதாகத்

திக்கா மற்பா டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச் – சிலபாடல்

பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற் – றுழலாதே

பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றோ தப்பெற் – றிடுவேனோ

எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட் – டிமையோர்வா

னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
னெட்டா வெட்டிப் – பொரும்வேலா

முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக் – களைவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

செட்டாகத் தேனைப் போலச்
சீரைத் தேடித் – திட்பம் அதாக

திக்காமல் பாடு உற்றாரில் சீர்
உற்றாருக்குச் – சில பாடல்

பெட்டாகக் கூறிப் போதத்தாரைப்
போல் வப்புற்று – உழலாதே .

பெற்றாரில் சார்வுற்றாய் நல் தாள்
சற்று ஓதப் – பெற்றிடுவேனோ

எட்டா(து) நெட்டாகத் தோகைக்கே
புக்கு ஓலத்திட்டு – இமையோர் வானில்

பாரில் சூழச் சூரைத் தான்
எட்டா வெட்டிப் – பொரும் வேலா

முட்டாமல் தாளைச் சேவிப்பார்
முன் பாவத்தைக் – களைவோனே

முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

English

chettA kaththE naippO lacchee
raiththE diththit – pamathAkath

thikkA maRpA dutRA riRcee
rutRA rukkuc – cilapAdal

pettA kakkU RippO thaththA
raippOl vapput – RuzhalAthE

petRA riRcAr vutRAy natRAL
satRO thappet – RiduvEnO

ettA nettA kaththO kaikkE
pukkO laththit – timaiyOrvA

niRpA riRchU zhacchU raiththA
nettA vettip – porumvElA

muttA matRA LaicchE vippAr
muRpA vaththaik – kaLaivOnE

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

chettAkath thEnaip pOlac
ceeraith thEdith – thitpam athAka

thikkAmal pAdu utRAril ceer
utRArukkuc – cila pAdal

pettAkakkUrip pOthaththAraip
pOl vapputRu – uzhalAthE

petRAril sArvutRAy nal thAL
satRu Othap – petRiduvEnO

ettA(thu) nettAkath thOkaikkE
pukku Olaththiddu – imaiyOr

vAnil pAril chUzhac chUraith thAn
ettA vettip – porum vElA

muttAmal thALaic chEvippAr
mun pAvaththaik – kaLaivOnE

muththA muththee aththA suththA
muththA muththip – perumALE.