திருப்புகழ் 1120 பத்து ஏழு எட்டு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1120 Paththuezhuettu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் – படவேயும்

பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் – கிரைதேடி

எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் – திலுமோடி

எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் – கடவேனோ

சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்சா டிக்கற் – பணிதேசா

சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் – சையமார்பா

முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் – கிறையோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் ரட்டால்
வைத்தே பத்திப் – பட வேயும்

பைப் பீறல் கூரை பாசத் தா
சற்காரத்துக்கு – இரை தேடி

எத் தேசத்து ஓடித் தேசத்தோடு
ஒத்து ஏய் சப்தத்திலும் – ஓடி

எய்த்தே நத்தா பற்றா மல் தாது
இற்றே முக்கக் – கடவேனோ

சத்தே முற்றாய் அத்தானைச் சூர்
கல் சாடிக் கற்பு – அணி தேசா

சோதிப் பூதி சட் பாலத்தா
அக் கோடல் – செச்சைய மார்பா

முத் தாபத்தார் எட்டா வைப்பா
வித்தா முத்தர்க்கு – இறையோனே

முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

English

paththE zhettee rettEzh rattAl
vaiththE paththip – padavEyum

paippee RaRkU raippA saththA
saRkA raththuk – kiraithEdi

eththE saththO diththE saththO
doththEy sapthath – thilumOdi

eyththE naththA patRA matRA
thitRE mukkak – kadavEnO

saththE mutRA yaththA naiccUr
kaRchA dikkaR – paNithEsA

satcO thippU thippA laththA
akkO daRcsec – chaiyamArpA

muththA paththA rettA vaippA
viththA muththark – kiRaiyOnE

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

paththu Ezhu ettu eerettu Ezh rattAl
vaiththE paththip – pada vEyum

paip peeRal kUrai pAsath thA
saRkAraththukku – irai thEdi

eth thEsaththu Odith thEsaththOdu
oththu Ey sapthaththilum – Odi

eyththE naththA patRA mal thAthu
itRE mukkak – kadavEnO

saththE mutRAy aththAnaic cUr
kal sAdik kaRpu – aNi thEsA

sOthip pUthi sat pAlaththA
ak kOdal cecchaiya – mArpA

muth thApaththAr ettA vaippA
viththA muththarkku – iRaiyOnE

muththA muththee aththA suththA
muththA muththip – perumALE