திருப்புகழ் 1121 பொற்கோ வைக்கே (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1121 Portkovaikke

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் – பகர்வார்தம்

பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் – பொருள்தேடித்

தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் – சிமமான

திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
வுக்கோ டிக்கெட் – டிடலாமோ

தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் – பரமானாய்

தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் – தகையோடே

முற்கா னப்பே தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் – கணியானாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

பொன் கோவைக்கே பல் கோவைக்கே
பொய்ப் போகத்தைப் – பகர்வார் தம்

பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்து
ஏகைக்கு – பொருள் தேடி

தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ்
திக்கு ஓடி – பச்சிமமான

திக்கு ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு
ஓடிக் – கெட்டிடலாமோ

தற்கோலி பாவிப்பார் நல்
சீரைச் சார தற்பரம் – ஆனாய்

தப்பா முப்பாலைத் தேடி
தேசத்தோர் நிற்கத் – தகையோடே

முன் கானப் பேதைக்காகப் போய்
முன் பால் வெற்பில் – கணி ஆனாய்

முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

English

poRkO vaikkE paRkO vaikkE
poyppO kaththaip – pakarvArtham

poykkE meykkE piththA kippO
kiththE kaikkup – poruLthEdith

theRkO dikkA sikkO dikkeezh
thikkO dippac – cimamAna

thikkO dippA NikkO diththee
vukkO dikket – tidalAmO

thaRkO lippA vippAr naRcee
raiccA raththaR – paramAnAy

thappA muppA laiththE diththE
saththOr niRkath – thakaiyOdE

muRkA nappE thaikkA kappOy
muRpAl veRpiR – kaNiyAnAy

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

pon kOvaikkE pal kOvaikkE
poyp pOkaththaip – pakarvAr tham

poykkE meykkE piththAki pOkiththu
Ekaikkup – poruL thEdi

theRku Odi kAsikku Odi keezh
thikku Odi – paccimamAna

thikku Odi pANikku Odi theevukku
Odik – kettidalAmO

thaRkOli pAvippAr nal
ceeraic cAra thaRparam – AnAy

thappA muppAlai thEdi
thEsaththAr niRka – thakaiyOdE

mun kAnap pEthaikkAkap pOy
mun pAl veRpil – kaNi AnAy

muththA muththee aththA suththA
muththA muththip – perumALE