Thiruppugal 1122 Portpuvai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
தப்பே சிப்பொற் – கனிவாயின்
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
ணைப்பூண் வெற்பிற் – றுகில்சாயக்
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
சுக்கே கைக்குத் – திடுமாதர்
கட்கே பட்டே நெட்டா சைப்பா
டுற்றே கட்டப் – படுவேனோ
சொற்கோ லத்தே நற்கா லைச்சே
விப்பார் சித்தத் – துறைவோனே
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்
விக்கா முக்கத் – தொடும்வேலா
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
முத்தாள் முத்தச் – சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான
பொன் பூவைச் சீரைப் போலப் போதப்
பேசிப் பொன் – கனி வாயின்
பொய்க் காமத்தே மெய்க்கு ஆம் அப்
பூணைப் பூண் வெற்பில் – துகில் சாய
கற்பால் எக்கா உட்கோலிக்
காசுக்கே கை குத்து – இடு(ம்) மாதர்
கட்கே பட்டே நெட்டு ஆசைப்
பாடு உற்றே கட்டப் – படுவேனோ
சொல் கோலத்தே நல் காலைச்
சேவிப்பார் சித்தத்து – உறைவோனே
தொக்கே கொக்காகிச் சூழ அச் சூர்
விக்கா முக்கத் – தொடும் வேலா
முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார்
முத்தாள் முத்தச் – சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.
English
poRpU vaicchee raippO lappO
thappE sippoR – kanivAyin
poykkA maththE meykkA mappU
NaippUN veRpit – RukilsAyak
kaRpA lekkA vutkO likkA
sukkE kaikkuth – thidumAthar
katkE pattE nettA saippA
dutRE kattap – paduvEnO
soRkO laththE naRkA laicchE
vippAr siththath – thuRaivOnE
thokkE kokkA kiccU zhaccUr
vikkA mukkath – thodumvElA
muRkA laththE veRpEy vutRAr
muththAL muththac – chiRiyOnE
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.
English Easy Version
pon pUvaic cheeraip pOlap pOthap
pEsip pon – kani vAyin
poyk kAmaththE meykku Am ap
pUNaip pUN veRpil – thukil sAya
kaRpAl ekkA utkOlik
kAsukkE kai kuththu – idu(m) mAthar
katkE pattE nettu Asaip
pAdu utRE kattap – paduvEnO
sol kOlaththE nal kAlaic
chEvippAr siththaththu – uRaivOnE
thokkE kokkAkich chsUzhUzha ac cUr
vikkA mukkath – thodum vElA
muRkAlaththE veRpu EyvutRAr
muththAL muththac – chiRiyOnE
muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.