திருப்புகழ் 1123 மெய்க்கூணைத் தேடி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1123 Meykkunaiththedi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் – பலகாலும்

வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற் – களையோதிக்

கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற் – பழியாதுன்

கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற் – றருவாயே

பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற் – புனமானைப்

பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப் – புகல்வோனே

முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் – சிறியோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் – தனதான

மெய்க்கு ஊணைத் தேடிப் பூமிக்கே
வித்தாரத்தில் – பல காலும்

வெட்காமல் சேரிச் சோரர்க்கே
வித்து ஆசைச் – சொற்களை ஓதி

கைக்காணிக் கோணல் போதத்தாரை
போலக் கற்பு – அழியாது

உன் கற்பு ஊடுற்றே நல் தாளைப்
பாடற்கே நல் சொல் – தருவாயே

பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய்
முற்பால் வெற்பில் – புன மானைப்

பொன் தோளில் சேர்க்கைக்காகப் பாதத்
தாள் பற்றிப் – புகல்வோனே .

முக்கோண தானத்தாளைப் பால்
வைத்தார் முத்தச் – சிறியோனே

முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்தி – பெருமாளே. .

English

meykkU NaiththE dippU mikkE
viththA raththiR – palakAlum

vetkA maRchE ricchO rarkkE
viththA saicchoR – kaLaiyOthik

kaikkA NikkO NaRpO thaththA
raippO lakkaR – pazhiyAthun

kaRpU dutRE natRA LaippA
daRkE naRchoR – RaruvAyE

poykkO NaththAzh meykkO NippOy
muRpAl veRpiR – punamAnaip

potRO LiRchEr kaikkA kappA
thaththAL patRip – pukalvOnE

mukkO NaththA naththA LaippAl
vaiththAr muththac – chiRiyOnE

muththA muththee yaththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

meykku UNaith thEdip pUmikkE
viththAraththil – pala kAlum

vedkAmal sEris sOrarkkE
viththu Asais – soRkaLai Othi

kaikkANik kONal pOthaththArai
pOlak kaRpu – azhiyAthu

un kaRpu UdutRE nal thALaip
pAdaRkE nal sol – tharuvAyE

poyk kOL naththu Azh meyk kONip pOy
muRpAl veRpil – puna mAnaip

pon thOLil sErkkaikkAkap pAthath
thAL patRip – pukalvOnE

mukkONa thAnaththALaip pAl
vaiththAr muththac – chiRiyOnE

muththA muththee aththA suththA
muththA muththi – perumALE