திருப்புகழ் 1125 அரிய வஞ்சகர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1125 Ariyavanjagar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தன தனனா தனதன
தந்தன தனனா தனதன
தனன தந்தன தனனா தனதன – தனதான

அரிய வஞ்சக ரறவே கொடியவர்
அவலர் வன்கண ரினியா ரவகுணர்
அசட ரன்பில ரவமே திரிபவர் – அதிமோக

அலையில் மண்டிய வழியே யொழுகியர்
வினைநி ரம்பிடு பவமே செறிபவர்
அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் – நரகேற

உரிய சஞ்சல மதியா னதுபெறு
மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்
உபய அங்கமு நிலையா கிடவொரு – கவியாலே

உலக முண்டவர் மதனா ரிமையவர்
தருவெ னும்படி மொழியா வவர்தர
உளது கொண்டுயி ரவமே விடுவது – தவிராதோ

கரிய கொந்தள மலையா ளிருதன
அமுது ணுங்குரு பரனே திரைபடு
கடல டும்படி கணையே வியஅரி – மருகோனே

கருணை கொண்டொரு குறமா மகளிடை
கலவி தங்கிய குமரா மயில்மிசை
கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு – மிளையோனே

திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
பொதுந டம்புரி யரனா ரிடமுறை
சிவைச வுந்தரி யுமையா ளருளிய – புதல்வோனே

சிகர வெண்கரி அயிரா வதமிசை
வருபு ரந்தர னமரா பதியவர்
சிறைவி டும்படி வடிவேல் விடவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தன தனனா தனதன
தந்தன தனனா தனதன
தனன தந்தன தனனா தனதன – தனதான

அரிய வஞ்சகர் அறவே கொடியவர்
அவலர் வன்கணர் இனியார் அவகுணர்
அசடர் அன்பிலர் அவமே திரிபவர் – அதிமோக

அலையில் மண்டிய வழியே ஒழுகியர்
வினை நிரம்பிடு பவமே செறிபவர்
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் – நரகு ஏற

உரிய சஞ்சல மதியானது பெறு
மன இடும்பர்கள் இடம் ஏது என அவர்
உபய அங்கமும் நிலையாகிட ஒரு – கவியாலே

உலகம் உண்டவர் மதனார் இமையவர்
தரு எனும்படி மொழியா அவர் தர
உளது கொண்டு உயிர் அவமே விடுவது – தவிராதோ

கரிய கொந்தள மலையாள் இரு தன
அமுது உணும் குரு பரனே திரை படு
கடல் அடும்படி கணை ஏவிய அரி – மருகோனே

கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை
கலவி தங்கிய குமரா மயில் மிசை
கடுகி எண் திசை நொடியே வலம் வரும் – இளையோனே

திரி புரம் கனல் நகையால் எரி செய்து
பொது நடம் புரி அரனார் இடம் உறை
சிவை சவுந்தரி உமையாள் அருளிய – புதல்வோனே

சிகர வெண் கரி அயிராவத மிசை
வரு புரந்தரன் அமரா பதி அவர்
சிறை விடும்படி வடிவேல் விடவல – பெருமாளே

English

ariya vanjaka raRavE kodiyavar
avalar vankaNa riniyA ravakuNar
asada ranpila ravamE thiripavar – athimOka

alaiyil maNdiya vazhiyE yozhukiyar
vinaini rampidu pavamE seRipavar
aruLthu Ranthava ridamvAzh savalaikaL – narakERa

uriya sanjala mathiyA nathupeRu
manai dumparka LidamE thenAvar
upaya angamu nilaiyA kidavoru – kaviyAlE

ulaka muNdavar mathanA rimaiyavar
tharuve numpadi mozhiyA vavarthara
uLathu koNduyi ravamE viduvathu – thavirAthO

kariya konthaLa malaiyA Liruthana
amuthu Nunguru paranE thiraipadu
kadala dumpadi kaNaiyE viya ari – marukOnE

karuNai koNdoru kuRamA makaLidai
kalavi thangiya kumarA mayilmisai
kaduki yeNdisai nodiyE valamvaru – miLaiyOnE

thiripu ranganal nakaiyA leriseythu
pothuna dampuri yaranA ridamuRai
sivaisa vunthari yumaiyA LaruLiya – puthalvOnE

sikara veNkari ayirA vathamisai
varupu ranthara namarA pathiyavar
siRaivi dumpadi vadivEl vidavala – perumALE.

English Easy Version

ariya vanjakar aRavE kodiyavar
avalar vankaNar iniyAr avakuNar
asadar anpilar avamE thiripavar – athimOka

alaiyil maNdiya vazhiyE ozhukiyar
vinai nirampidu pavamE seRipavar
aruL thuRanthavar idam vAzh savalaikaL – naraku ERa

uriya sanjala mathiyAnathu peRu
mana idumparkaL idam Ethu ena avar
upaya angamum nilaiyAkida oru – kaviyAlE

ulakam uNdavar mathanAr imaiyavar
tharu enumpadi mozhiyA avar thara
uLathu koNdu uyir avamE viduvathu – thavirAthO

kariya konthaLa malaiyAL iru thana
amuthu uNum kuru paranE thirai padu
kadal adumpadi kaNai Eviya ari – marukOnE

karuNai koNdu oru kuRa mA makaL idai
kalavi thangiya kumarA mayil misai
kaduki eN thisai nodiyE valam varum – iLaiyOnE

thiri puram kanal nakaiyAl eri seythu
pothu nadam puri aranAr idam uRai
sivai savunthari umaiyAL aruLiya – puthalvOnE

sikara veN kari ayirAvatha misai
varu purantharan amarA pathi avar
siRai vidumpadi vadivEl vidavala – perumALE