திருப்புகழ் 1126 ஆராத காதலாகி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1126 Aradhakadhalagi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன – தந்ததான

ஆராத காத லாகி மாதர்த
மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியி – லஞ்சியாலே

ஆசாப சாசு மூடி மேலிட
ஆசார வீன னாகி யேமிக
ஆபாச னாகி யோடி நாளும – ழிந்திடாதே

ஈராறு தோளு மாறு மாமுக
மோடாரு நீப வாச மாலையு
மேறான தோகை நீல வாசியு – மன்பினாலே

ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதக – மன்புறாதோ

வாராகி நீள்க பாலி மாலினி
மாமாயி யாயி தேவி யாமளை
வாசாம கோச ராப ராபரை – யிங்குளாயி

வாதாடி மோடி காடு காளுமை
மாஞால லீலி யால போசனி
மாகாளி சூலி வாலை யோகினி – யம்பவானி

சூராரி மாபு ராரி கோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாச லாதி லோக நாயகி – தந்தவாழ்வே

தோளாலும் வாளி னாலு மாறிடு
தோலாத வான நாடு சூறைகொள்
சூராரி யேவி சாக னேசுரர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன – தந்ததான

ஆராத காத லாகி மாதர்தம்
ஆபாத சூட மீதி லே விழி
யாலோலனாய் விகாரமாகி – இலஞ்சியாலே

ஆசா பசாசு மூடி மேலிட
ஆசார வீனனாகியே மிக
ஆபாசனாகி யோடி நாளும் – அழிந்திடாதே

ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு
ஆரு நீப வாச மாலையும்
ஏறான தோகை நீல வாசியும் – அன்பினாலே

ஏனோரும் ஓதுமாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறும் ஈடேறு
மாறு ஞான போதகம் – அன்புறாதோ

வாராகி நீள் கபாலி மாலினி
மாமாயி யாயி தேவி யாமளை
வாசா மகோசரா பராபரை – இங்கு உள் ஆயி

வாதாடி மோடி காடுகாள் உமை
மாஞால லீலி ஆல போசனி
மாகாளி சூலி வாலை யோகினி – அம்பவானி

சூராரி மாபுராரி கோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாசலாதி லோக நாயகி – தந்தவாழ்வே

தோளாலும் வாளினாலு மாறிடு
தோலாத வான நாடு சூறைகொள்
சூராரியே விசாகனே சுரர் – தம்பிரானே.

English

ArAtha kAtha lAki mAthartha
mApAtha chUda meethi lEvizhi
yAlOla nAyvi kAra mAkiyi – lanjiyAlE

AsApa sAsu mUdi mElida
AchAara veena nAki yEmika
ApAsa nAki yOdi nALuma – zhinthidAthE

eerARu thOLu mARu mAmuka
mOdAru neepa vAsa mAlaiyu
mERAna thOkai neela vAsiyu – manpinAlE

EnOru mOthu mARu theethaRa
nAnAsu pAdi yAdi nAdoRu
meedERu mARu nyAna pOthaka – manpuRAthO

vArAki neeLka pAli mAlini
mAmAyi yAyi thEvi yAmaLai
vAchAma kOsa rApa rAparai – yinguLAyi

vAthAdi mOdi kAdu kALumai
mAnyAla leeli yAla pOsani
mAkALi chUli vAlai yOkini – yampavAni

sUrAri mApu rAri kOmaLai
thULAya pUthi pUsu nAraNi
sONAsa lAthi lOka nAyaki – thanthavAzhvE

thOLAlum vALi nAlu mARidu
thOlAtha vAna nAdu sURaikoL
sUrAri yEvi sAka nEsurar – thambirAnE.

English Easy Version

ArAtha kAtha lAki mAthartham
ApAtha chUda meethi lEvizhi
yAlOla nAy vikAra mAki – yilanjiyAlE

AsA pasAsu mUdi mElida
AchAara veena nAki yE mika
ApAsa nAki yOdi nALum – azhinthidAthE

eerARu thOLu mARu mAmukam
OdAru neepa vAsa mAlaiyum
ERAna thOkai neela vAsiyum – anpinAlE

EnOru mOthu mARu theethaRa
nAnAsu pAdi yAdi nAdoRum eedERu
mARu nyAna pOthakam – anpuRAthO

vArAki neeLka pAli mAlini
mAmAyi yAyi thEvi yAmaLai
vAchAma kOsa rA parAparai – yinguLAyi

vAthAdi mOdi kAdu kALumai
mAnyAla leeli yAla pOsani
mAkALi chUli vAlai yOkini – yampavAni

sUrAri mApu rAri kOmaLai
thULAya pUthi pUsu nAraNi
sONAsa lAthi lOka nAyaki – thanthavAzhvE

thOLAlum vALi nAlu mARidu
thOlAtha vAna nAdu sURaikoL
sUrAri yEvi sAka nEsurar – thambirAnE