திருப்புகழ் 1127 ஆராதனர் ஆடம்பர (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1127 Aradhanaradambara

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த – தனதான

ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து – மடலாலும்

ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து – மருளாதே

நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க – நியமாக

நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி – தரவேணும்

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க – அமராடி

வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து – வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த – கதிர்வேலா

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த – தனதான

ஆராதனர் ஆடம் பரத்து மாறாது சவாலம் பனத்தும்
ஆவாகன மாமந் திரத்து – மடலாலும்

ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்தும்
ஆமாறு எரி தாம் இந்தனத்து – மருளாதே

நீராளக நீர்மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க – நியமாக

நீவாவென நீயிங் கழைத்து பாராவர ஆநந்த சித்தி
நேரேபரமாநந்த முத்தி – தரவேணும்

வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளசமூகம் பிழைக்க – அமராடி

வேதாமுறை யோவென்றரற்ற ஆகாசகபாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து – வடவாலும்

வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த – கதிர்வேலா

வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரிதாபந் தவிர்த்த – பெருமாளே.

English

ArAdhanar Adambaraththu mARAdhu savAlam banaththu
mAvAgana mA manthi raththu – madalAlum

ARArdhesa mAmaNda paththum vEdhAgama mOdhun thalaththum
AmAReri dhAmin dhanaththu – maruLAdhE

neerALaga neerman janaththa needAraga vEdhaNda maththa
neenAnaRa vERindri niRka – niyamAga

neevAvena neeying azhaiththu pArAvara Anandha sidhdhi
nErE paramAnandha muththi – tharavENum

veerAkara chAmundi chakra pArAgaNa bUthan kaLikka
vEthALa samUgam pizhaikka – amarAdi

vEdhA muRaiyO endraratra AkAsa kapAlam piLakka
vErmAmara mUlan thaRiththu – vadavAlum

vArAgaram Ezhum kudiththu mAsUrOdu pOram baRuththu
vANAsana mElun thuNiththa – kadhirvElA

vAnAd arasALum padikku vAvAvena vAven drazhaiththu
vAnOr parithApan thavirththa – perumALE.

English Easy Version

ArAdhanar Adambaraththu mARAdhu savAlam banaththum
mAvAgana mA manthi raththu – madalAlum

ARArdhesa mAmaNda paththum vEdhAgama mOdhun thalaththum
AmAReri dhAmin dhanaththu – maruLAdhE

neerALaga neerman janaththa needAraga vEdhaNda maththa
neenAnaRa vERindri niRka – niyamAga

neevAvena neeying azhaiththu pArAvara Anandha sidhdhi
nErE paramAnandha muththi – tharavENum

veerAkara chAmundi chakra pArAgaNa bUthan kaLikka
vEthALa samUgam pizhaikka – amarAdi

vEdhA muRaiyO endraratra AkAsa kapAlam piLakka
vErmAmara mUlan thaRiththu – vadavAlum

vArAgaram Ezhum kudiththu mAsUrOdu pOram baRuththu
vANAsana mElun thuNiththa – kadhirvElA

vAnAd arasALum padikku vAvAvena vAven drazhaiththu
vAnOr parithApan thavirththa – perumALE,