திருப்புகழ் 1129 ஆனாத ஞான (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1129 Anadhanjana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன – தனதான

ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி – ரழியாதே

ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி – துலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் – இடராழி

ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் – மறவேனே

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி – லொருமூவர்

மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக – வனமேவும்

தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்
சேராத சூர னைத்து ணித்த டக்கிய – வரைமோதிச்

சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன – தனதான

ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்
ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும்
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் – அழியாதே

ஆசா பயோதியைக் கடக்க விட்டதும்
வாசா மகோசரத்து இருத்து வித்ததும்,
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது – உலகேழும்

யான் ஆக நாம(ம்) அற்புதத் திருப்புகழ்
தேன் ஊற ஓதி எத்திசைப் புறத்தினும் ஏடு
ஏவு ராஜதத்தினை பணித்ததும் – இடர் ஆழி

ஏறாத மா மலத்ரய குணத்ரய
நானா விகார புற்புதம் பிறப்பு அற
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் – மறவேனே

மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி
ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து ஒரு
மால் ஆய வாளியைத் தொடுத்து அரக்கரில் – ஒரு மூவர்

மாளாது பாதகம் புரத்ரயத்தவர்
தூளாகவே நுதல் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக – வனம் மேவும்

தே(ம்) நாயகா எனத் துதித்த உத்தம
வான் நாடர் வாழ விக்ரமத் திருக் கழல்
சேராத சூரனைத் துணித்து அடக்கி அ – வரை மோதி

சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ
மாறா நிசாசர குலத்தை இப்படி
சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய – பெருமாளே.

English

AnAdha njAna puththi yaikko duththathum
ArAyu nUlka LiRka ruththa Liththathum
AthEsa vAzhvi niRpra miththi Laiththuyi – razhiyAthE

AsApa yOthi yaikka dakka vittathum
vAsAma kOsa raththi ruththu viththathum
ApAtha nEnmi kapra siththi petRini – thulakEzhum

yAnAka nAma aRpu thaththi ruppukazh
thEnURa vOthi yeththi saippu Raththinum
EdEvu rAja thaththi naippa Niththathum – idarAzhi

ERAtha mAma lathra yakku Nathraya
nAnAvi kAra puRpu thappi RappaRa
EthEma mAye nakka nugra kiththathum – maRavEnE

mAnAka nANva luppu Raththu vakkiyor
mAmEru pUtha raththa nuppi diththoru
mAlAya vALi yaiththo duththa rakkari – lorumUvar

mALAthu pAtha kappu rathra yaththavar
thULAka vEmu thaRci riththa viththakar
vAzhvEva lAri petRe duththa kaRpaka – vanamEvum

thEnAya kA enaththu thiththa vuththama
vAnAdar vAzha vikra maththi rukkazhal
sErAtha cUra naiththu Niththa dakkiya – varaimOthi

sERAya cOri pukka Lakkar thittezha
mARAni sAsa rakku laththai yippadi
seerAvi nAla Ruththa Ruththo thukkiya – perumALE.

English Easy Version

AnAtha njAna puththiyaik koduththathum
ArAyu(m) nUlkaLil karuththu aLiththathum
AthEsa vAzhvinil pramiththu iLaiththu uyir – azhiyAthE

AsA payOthiyaik kadakka vittathum
vAsA makOsaraththu iruththu viththathum
ApAthanEn mika prasaththi petRu inithu – ulakEzhum

yAn Aka nAma(m) aRputhath thiruppukazh
thEn URa Othi eththisaip puRaththinum Edu
Evu rAjathaththinaip paNiththathum – idar Azhi

ERAtha mA malathraya kuNathraya
nAnA vikAra puRputham piRappu aRa
Ethu EmamAy enakku anukrakiththathum – maRavEnE

mA nAkam nAN valuppuRath thuvakki
or mA mEru pUtharath thanup pidiththu oru
mAl Aya vALiyaith thoduththu arakkaril – oru mUvar

mALAthu pAthakam purathrayaththavar
thULAkavE nuthal siriththa viththakar
vAzhvE valAri petReduththa kaRpaka – vanam mEvum

thE(m) nAyakA enath thuthiththa uththama
vAn nAdar vAzha vikramath thiruk kazhal
sErAtha cUranaith thuNiththu adakki a – varai mOthi

sERu Aya cOri pukku aLakkar thittu ezha
mARA nisAsara kulaththai ippadi
seerAvinAl aRuththu aRuththu othukkiya – perumALE.