திருப்புகழ் 1130 இடமருவுஞ் சீற்ற (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1130 Idamaruvumcheetra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த – தனதான

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் – வலையாலே

இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி – விலைபேசி

மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து – நிலையாக

வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து – விடலாமோ

படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி – யிருநாழி

படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி – நெடுநீலி

அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி – பெருவாழ்வே

அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த – தனதான

இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து
விடம் முழுதும் தேக்கியே நிறைத்து
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் – வலையாலே

இனிமை உடன் பார்த்து உ(ள்)ளே அழைத்து
முக படமும் சேர்த்து வார் அழுத்தும்
இரு வரையும் காட்டி மால் எழுப்பி – விலை பேசி

மடல் அவிழும் பூக்களால் நிறைத்த
சுருள் அளகம் தூற்றியே முடித்து
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து – நிலையாக

வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும்
அரிவையர் தம் பேச்சிலே முழுக்க
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து – விடலாமோ

படி முழுதும் கூர்த்த மா குலத்தி
முது மறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி – இரு நாழி

படி கொடு அறம் காத்த மா பரைச்சி
மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி
பல திசையும் போய்க் குலா விருப்பி – நெடு நீலி

அடு புலியின் தோல் படாம் உடைச்சி
சமர முகம் காட்டு(ம்) மால் விடைச்சி
அகிலமும் உண்டார்க்கு நேர் இளைச்சி – பெருவாழ்வே

அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த
விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த – பெருமாளே.

English

idamaruvunj cheetRa vEle duththu
vidamuzhuthun thEkki yEni Raiththu
irukuzhaiyun thAkki meeLka yaRkaN – valaiyAlE

inimaiyudan pArththu LEya zhaiththu
mukapadamunj chErththu vAra zhuththum
iruvaraiyung kAtti mAle zhuppi – vilaipEsi

madalavizhum pUkka LAlni Raiththa
suruLaLakan thUtRi yEmu diththu
maRukidainin RArkka vEna kaiththu – nilaiyAka

varuporuLkaN dERka vEpa Rikkum
arivaiyartham pEcchi lEmu zhukka
manamurukun thUrththa nAyi Laiththu – vidalAmO

padimuzhuthung kUrththa mAku laththi
muthumaRaiyin pEcchi nUli daicchi
pakirmathiyam pUththa thAzhcha daicchi – yirunAzhi

padikodaRang kAththa mApa raicchi
maNivayirang kOththa thOLva Laicchi
palathisaiyum pOykku lAvi ruppi – neduneeli

adupuliyin thORpa dAmu daicchi
samaramukang kAttu mAlvi daicchi
akilamumuN dArkku nEri Laicchi – peruvAzhvE

ariyayanin REththa vEmi kuththa
viputharkulam pErkka vALe duththa
asurarkulam pAzhkka vEle duththa – perumALE.

English Easy Version

idam maruvum seetRa vEl eduththu
vidam muzhuthum thEkkiyE niRaiththu
iru kuzhaiyum thAkki meeL kayal kaN – valaiyAlE

inimai udan pArththu u(L)LE azhaiththu
muka padamum sErththu vAr azhuththum
iru varaiyum kAtti mAl ezhuppi – vilai pEsi

madal avizhum pUkkaLAl niRaiththa
suruL aLakam thUtRiyE mudiththu
marukidai ninRu ArkkavE nakaiththu – nilaiyAka

varu poruL kaNdu ERkavE paRikkum
arivaiyar tham pEcchilE muzhukka
manam urukum thUrththanAy iLaiththu – vidalAmO

padi muzhuthum kUrththa mA kulaththi
muthu maRaiyin pEcchi nUl idaicchi
pakir mathiyam pUththa thAzh chadaicchi – iru nAzhi

padi kodu aRam kAththa mA paraicchi
maNi vayiram kOththa thOL vaLaicchi
pala thisaiyum pOyk kulA viruppi – nedu neeli

adu puliyin thOl padAm udaicchi
samara mukam kAttu(m) mAl vidaicchi
akilamum uNdArkku nEr iLaicchi – peruvAzhvE

ari ayan ninRu EththavE mikuththa
viputhar kulam pErkka vAL eduththa
asurar kulam pAzhkka vEl eduththa – perumALE.