திருப்புகழ் 1131 இடர் மொய்த்து (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1131 Idarmoiththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
தனதத்தத் தனதத்தத் – தனதான

இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
டினிமைச்சுற் றமுமற்றைப் – புதல்வோரும்


இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்
கிடையத்துக் கமும்விட்டிட் – டவரேக

விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்
டுயிர்வித்துத் தனையெற்றிக் – கொடுபோமுன்


வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்
புயவெற்றிப் புகழ்செப்பப் – பெறுவேனோ

அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
கறிவொக்கப் பொருள்கற்பித் – திடுவோனே


அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
டலறக்குத் துறமுட்டிப் – பொரும்வேலா

கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
கிரிகைக்குட் டிகிரிக்கொற் – றவன்மாயன்

கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்
கடவுட்சக் கிரவர்த்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
தனதத்தத் தனதத்தத் – தனதான

இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை இட்டு
இனிமைச் சுற்றமும் மற்றைப் – புதல்வோரும்

இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய
பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு – அவர் ஏக

விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம் உற்றிட்டு
உயிர் வித்துத்தனை எற்றிக் – கொடு போ முன்

வினை பற்று அற்று அற நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப்
புய(ம்) வெற்றிப் புகழ் செப்பப் – பெறுவேனோ

அடர் செக்கரச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு
அறிவு ஒக்கப் பொருள் – கற்பித்திடுவோனே

அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்தது பட்டிட்டு
அலறக் குத்து உற முட்டிப் – பொரும் வேலா

கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக்
கிரி கைக்குள் திகிரிக் கொற்றவன் – மாயன்

கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக்
கடவுள் சக்கிரவர்த்திப் – பெருமாளே.

English

idarmoyththuth thodariRpoyk kudilakkik kidaiyittit
tinimaicchut RamumatRaip – puthalvOrum

inamoppith thisaiyacchoR palakaththit tizhiyappiR
kidaiyaththuk kamumvittit – tavarEka

vidameththac chorisekkat samanvettath thanamutRit
tuyirviththuth thanaiyetRik – kodupOmun

vinaipatRat RaRaniththap puthumaicchoR koduvetchip
puyavetRip pukazhseppap – peRuvEnO

adarsekkarc chadaiyiRpoR piRaiyappup punaiyappark
kaRivokkap poruLkaRpith – thiduvOnE

alakaikkut pasithiththap palakaikkoth thathupattit
talaRakkuth thuRamuttip – porumvElA

kadalukkut padusarppath thinilmecchath thuyilpacchaik
kirikaikkut tikirikkot – RavanmAyan

kamalaththiR payilnettaik kuyavaRket tisaiyarkkuk
kadavutchak kiravarththip – perumALE.

English Easy Version

idar moyththuth thodar il poyk kudil akkikku idai ittittu
inimaic chutRamum matRaip – puthalvOrum

inam oppiththu isaiyac chol pala kaththittu izhiya
piRku idaiyath thukkamum vittittu – avar Eka

vidam meththac chori sekkaN saman vettath thanam utRittu
uyir viththuththanai etRik – kodu pO mun

vinai patRu atRu aRa niththap puthumaic cholkodu vetchip
puya(m) vetRip pukazh seppap – peRuvEnO

adar sekkarch chadaiyil pon piRai appup punai apparkku
aRivu okkap poruL – kaRpiththiduvOnE

alakaikkuL pasi thiththap palakaik koththathu pattittu
alaRak kuththu uRa muttip – porum vElA

kadalukkuL padu sarppaththinil mecchath thuyil pacchaik
kiri kaikkuL thikirik kotRavan – mAyan

kamalaththil payil nettaik kuyavaRku eN thisaiyarkkuk
kadavuL sakkiravarththip – perumALE.