திருப்புகழ் 1132 இரவினிடை வேள் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1132 Iravinidaivel

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த – தனதான

இரவினிடை வேள்தொ டுத்து டன்று
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
யிருகுழையு மோதி யப்ப டங்கு – கடலோடே

எதிர்பொருது மானி னைத்து ரந்து
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
யினியமுத ஆல முற்ற கண்கள் – வலையாலே

முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
விசிறிவளை மாத ரைக்க லந்து
மொழியதர கோவை யிக்க ருந்தி – யமுதாகு

முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
சுழிமிதுன வாவி யிற்பு குந்து
முழுகியழி யாம னற்ப தங்கள் – தரவேணும்

திரையுலவு சாக ரத்தி லங்கை
நகரிலுறை ராவ ணற்கி யைந்த
தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு – திணிதோளுஞ்

சிதையவொரு வாளி யைத்து ரந்த
அரிமருக தீத றக்க டந்து
தெளிமருவு கார ணத்த மர்ந்த – முருகோனே

அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
யருளுமொரு நாய கற்ப ணிந்த – குருநாதா

அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
இரவுபக லாக நெக்க விழ்ந்த
அடியவர்கள் பாட லுக்கி சைந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த – தனதான

இரவின் இடை வேள் தொடுத்து உடன்று
முறுகு மலர் வாளியைப் பிணங்கி
இரு குழையும் மோதி அப்பு அடங்கு – கடலோடே

எதிர் பொருது மானினைத் துரந்து
சலதி கிழி வேல் தனைப் பொருந்தி
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் – வலையாலே

முரண் இளைஞர் ஆவியைத் தொடர்ந்து
விசிறி வளை மாதரைக் கலந்து
மொழி அதர கோவை இக்கு அருந்தி – அமுதாகு(ம்)

முகிழ் முகுளி தார(ம்) வெற்பு அணைந்து
சுழி மிதுன வாவியில் புகுந்து
முழுகி அழியாமல் நற் பதங்கள் – தர வேணும்

திரை உலவு சாகரத்து இலங்கை
நகரில் உறை ராவணற்கு இயைந்த
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு – திணி தோளும்

சிதைய ஒரு வாளியைத் துரந்த
அரி மருக தீது அறக் கடந்து
தெளி மருவு காரணத்து அமர்ந்த – முருகோனே

அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து
கருதும் ஒரு மூவருக்கு இரங்கி
அருளும் ஒரு நாயகன் பணிந்த – குரு நாதா

அகல் முடிவை ஆதியைத் தெளிந்து
இரவு பகலாக நெக்கு அவிழ்ந்த
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த – பெருமாளே.

English

iravinidai vELtho duththu danRu
muRukumalar vALi yaippi Nangi
yirukuzhaiyu mOthi yappa dangu – kadalOdE

ethirporuthu mAni naiththu ranthu
salathikizhi vEltha naippo runthi
yiniyamutha Ala mutRa kaNkaL – valaiyAlE

muraNiLainja rAvi yaiththo darnthu
visiRivaLai mAtha raikka lanthu
mozhiyathara kOvai yikka runthi – yamuthAku

mukizhmukuLi thAra veRpa Nainthu
suzhimithuna vAvi yiRpu kunthu
muzhukiyazhi yAma naRpa thangaL – tharavENum

thiraiyulavu sAka raththi langai
nakariluRai rAva NaRki yaintha
thesamudiyu meeru paththo zhungu – thiNithOLum

chithaiyavoru vALi yaiththu rantha
arimaruka theetha Rakka danthu
theLimaruvu kAra Naththa marntha – murukOnE

araNamathiL cUzhpu raththi runthu
karuthumoru mUva rukki rangi
yaruLumoru nAya kaRpa Nintha – gurunAthA

akalmudivai yAthi yaiththe Linthu
iravupaka lAka nekka vizhntha
adiyavarkaL pAda lukki saintha – perumALE.

English Easy Version

iravin idai vEL thoduththu udanRu
muRuku malar vALiyaip piNangi
iru kuzhaiyum mOthi appu adangu – kadalOdE

ethir poruthu mAninaith thuranthu
salathi kizhi vEl thanaip porunthi
ini amutha Alam utRa kaNkaL – valaiyAlE

muraN iLainjar Aviyaith thodarnthu
visiRi vaLai mAtharaik kalanthu
mozhi athara kOvai ikku arunthi – amuthAku(m)

mukizh mukuLi thAra(m) veRpu aNainthu
suzhi mithuna vAviyil pukunthu
muzhuki azhiyAmal naR pathangaL – thara vENum

thirai ulavu sAkaraththu ilangai
nakaril uRai rAvaNaRku iyaintha
thesa mudiyum eeru paththu ozhungu – thiNi thOLum

chithaiya oru vALiyaith thurantha
ari maruka theethu aRak kadanthu
theLi maruvu kAraNaththu amarntha – murukOnE

araNam mathiL cUzh puraththu irunthu
karuthum oru mUvarukku irangi
aruLum oru nAyakan paNintha – guru nAthA

akal mudivai Athiyaith theLinthu
iravu pakalAka nekku avizhntha
adiyavarkaL pAdalukku isaintha – perumALE..