திருப்புகழ் 1133 இரவொடும் பகலே (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1133 Iravodumpagale

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா – தனதான

இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலே – பெரிதாகி

இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே – வயதாகி

நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே – விழலாகி

நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித வீடே கூடா – தழிவேனோ

திருந டம்புரி தாளீ தூளீ
மகர குண்டலி மாரீ சூரி
திரிபு ரந்தழ லேவீ சார்வீ – யபிராமி

சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா – அருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் – மணவாளா

அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா – தனதான

இரவொடும் பகலே மாறாதே
அநுதினந்துயர் ஓயாதேயே
எரியும் உந்தியினாலே மாலே – பெரிதாகி

இரைகொளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டு ஒழியாதே வாதே
இடைகளின்சில நாளே போயே – வயதாகி

நரைகளும்பெரிதாயே போயே
கிழவனென்றொரு பேரே சார்வே
நடைகளும்பல தாறே மாறே – விழலாகி

நயனமுந்தெரியாதே போனால்
விடிவதென்று அடியேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாது – அழிவேனோ

திருநடம்புரி தாளீ தூளீ
மகர குண்டலி மாரீ சூரி
திரிபுரந்தழல் ஏவீ சார்வீ – யபிராமி

சிவன் இடந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெண் அம்பிகை வாலா சீலா – அருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபுரந்தொளிர் நாதா பாதா
அழகிளங்குற மானார் தேனார் – மணவாளா

அரியரன்பிர மாவோடே
மூவகையர் இந்திர கோமான்
நீள்வானமரர் கந்தருவானோர் ஏனோர் – பெருமாளே

English

iravodum pagalE mARAdhE
anudhinam thuyar OyAdhEyE
yeriyum undhiyinAlE mAlE – peridhAgi

irai koLumpadi UdE pAdE
migudhi koNdozhiyAdhE vAdhE
idaigaLin sila nALE pOyE – vayadhAgi

naraigaLum peridhAyE pOyE
kizhavan endroru pErE sArvE
nadaigaLum pala thARE mARE – vizhalAgi

nayanamum theriyAdhE pOnAl
vidivadhendr adiyEnE thAnE
natana kunjitha veedE kUdAdhu – azhivEnO

thiru natampuri thALee thULee
makara kundali mAree sUree
thiripuran thazhal Evee sArvee – abirAmi

sivan idanthari neelee sUlee
gavuri panchavi Ayee mAyee
sivai peN ambigai vAlA seelA – aruL bAlA

arava kingkiNi veerA dheerA
giri purandhoLir nAthA pAdhA
azhagiLan kuRamAnAr thEnAr – maNavALA

ariaran biramAvOdE mU
vagaiyar indhira kOmAneeL vAn
amarar kandharu vAnOr EnOr – perumALE.

English Easy Version

iravodum pagalE mARAdhE
anudhinam thuyar OyAdhEyE
yeriyum undhiyinAlE mAlE – peridhAgi

irai koLumpadi UdE pAdE
migudhi koNdu ozhiyAdhE vAdhE
idaigaLin sila nALE pOyE – vayadhAgi

naraigaLum peridhAyE pOyE
kizhavan endroru pErE sArvE
nadaigaLum pala thARE mARE – vizhalAgi

nayanamum theriyAdhE pOnAl
vidivadhendr adiyEnE thAnE
natana kunjitha veedE kUdAdhu – azhivEnO

thiru natampuri thALee thULee
makara kundali mAree sUree
thiripuran thazhal Evee sArvee – abirAmi

sivan idanthari neelee sUlee
gavuri panchavi Ayee mAyee
sivai peN ambigai vAlA seelA – aruL bAlA

arava kingkiNi veerA dheerA
giri purandhoLir nAthA pAdhA
azhagiLan kuRamAnAr thEnAr – maNavALA

ariaran biramAvOdE
mUvagaiyar indhira kOmAneeL vAn
amarar kandharu vAnOr EnOr – perumALE