திருப்புகழ் 1134 இருகுழை மீதோடி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1134 Irukuzhaimeedhodi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன – தனதான

இருகுழை மீதோடி மீளவும்
கயல்களு மாலால காலமும்
ரதிபதி கோலாடு பூசலு – மெனவேநின்

றிலகிய கூர்வேல்வி லோசன
ம்ருகமத பாடீர பூஷித
இளமுலை மாமாத ரார்வச – முருகாதே

முருகவிழ் கூதாள மாலிகை
தழுவிய சீர்பாத தூளியின்
முழுகிவி டாய்போம னோலயம் – வரவோது

முழுமதி மாயாவி காரமு
மொழிவது வாசாம கோசர
முகுளித ஞானோப தேசமு – மருள்வேணும்

அருமறை நூலோதும் வேதியன்
இரணிய ரூபாந மோவென
அரிகரி நாராய ணாவென – ஒருபாலன்

அவனெவ னாதார மேதென
இதனுள னோவோது நீயென
அகிலமும் வாழ்வான நாயக – னெனவேகி

ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போறு வாளரி
யுகிர்கொடு வாராநி சாசர – னுடல்பீறும்

உலகொரு தாளான மாமனும்
உமையொரு கூறான தாதையும்
உரைதரு தேவாசு ராதிபர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன – தனதான

இரு குழை மீது ஓடி மீளவும்
கயல்களும் ஆலாலகாலமும்
ரதி பதி கோல் ஆடு பூசலும் – எனவே நின்று

இலகிய கூர் வேல் விலோசன
ம்ருகமத பாடீர பூஷித
இள முலை மா மாதரார் வசம் – உருகாதே

முருகு அவிழ் கூதாள மாலிகை
தழுவிய சீர் பாத தூளியின்
முழுகி விடாய் போம் மனோலயம் – வர ஓது

முழு மதி மாயா விகாரமும்
ஒழிவது வாசா மகோசர
முகுளித ஞான உபதேசமும் – அருள் வேணும்

அரு மறை நூல் ஓதும் வேதியன்
இரணிய ரூபா நமோ என
அரி கரி நாராயணா என – ஒரு பாலன்

அவன் எவன் ஆதாரம் ஏது என
இதன் உளனோ ஓது நீ என
அகிலமும் வாழ்வான நாயகன் – என ஏகி

ஒரு கணை தூணோடு மோதிட
விசை கொடு தோள் போறு வாள் அரி
உகிர் கொடு வாரா நிசாசரன் – உடல் பீறும்

உலகு ஒரு தாள் ஆன மாமனும்
உமை ஒரு கூறான தாதையும்
உரை தரு தேவா சுர அதிபர் – பெருமாளே

English

irukuzhai meethOdi meeLavum
kayalkaLu mAlAla kAlamum
rathipathi kOlAdu pUsalu – menavEnin

Rilakiya kUrvElvi lOchana
mrukamatha pAdeera pUshitha
iLamulai mAmAtha rArvasa – murukAthE

murukavizh kUthALa mAlikai
thazhuviya seerpAtha thULiyin
muzhukivi dAypOma nOlayam – varavOthu

muzhumathi mAyAvi kAramu
mozhivathu vAsAma kOsara
mukuLitha njAnOpa thEsamu – maruLvENum

arumaRai nUlOthum vEthiyan
iraNiya rUpAna mOvena
arikari nArAya NAvena – orupAlan

avaneva nAthAra mEthena
ithanuLa nOvOthu neeyena
akilamum vAzhvAna nAyaka – nenavEki

orukaNai thUNOdu mOthida
visaikodu thOLpORu vALari
yukirkodu vArAni sAsara – nudalpeeRum

ulakoru thALAna mAmanum
umaiyoru kURAna thAthaiyum
uraitharu thEvAsu rAthipar – perumALE.

English Easy Version

iru kuzhai meethu Odi meeLavum
kayalkaLum AlAlakAlamum
rathi pathi kOl Adu pUsalum – enavE ninRu

ilakiya kUr vEl vilOsana
mrukamatha pAdeera pUshitha
iLa mulai mA mAtharAr vasam – urukAthE

muruku avizh kUthALa mAlikai
thazhuviya seer pAtha thULiyin
Muzhuki vidAy pOm manOlayam – vara Othu

muzhu mathi mAyA vikAramum
ozhivathu vAsA makOsara
mukuLitha njAna upathEsamum – aruL vENum

aru maRai nUl Othum vEthiyan
iraNiya rUpA namO ena
ari kari nArAyaNA ena – oru pAlan

avan evan AthAram Ethu ena
ithan uLanO Othu nee ena
akilamum vAzhvAna nAyagan – ena Eki

oru kaNai thUNOdu mOthida
visai kodu thOL pORu vAL ari
ukir kodu vArA nisAsaran – udal peeRum

ulaku oru thAL Ana mAmanum
umai oru kURAna thAthaiyum
urai tharu thEvA sura athipar – perumALE.