திருப்புகழ் 1135 இருமுலை மலை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1135 Irumulaimalai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன – தனதான

இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
இருவிழி யதனில கப்பட் டேமன
மிசைபட வசனமு ரைத்திட் டேபல – மினிதோடே

இடையது துவளகு லுக்கிக் காலணி
பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர
இளமுலை குழையஅ ணைத்துக் கேயுர – மணியோடே

மதகத பவளம ழுத்திப் பூஷண
மணிபல சிதறிநெ றித்துத் தானுக
மருமலர் புனுகுத ரித்துப் பூவணை – மதராஜன்

மருவிய கலவித னக்கொப் பாமென
மகிழ்வொடு ரசிதுமி குத்துக் கோதையை
மருவியு முருகிக ளைத்துப் பூமியி – லுழல்வேனோ

திரிபுர மெரியந கைத்துக் காலனை
யுதைபட மதனைய ழித்துச் சாகர
திரைவரு கடுவைமி டற்றிற் றானணி – சிவனார்தந்

திருவருள் முருகபெ ருத்துப் பாரினில்
சியொதனன் மடியமி குத்துப் பாரத
செயமுறு மரிதன்ம னத்துக் காகிய – மருகோனே

நரிகழு வதுகள்க ளிக்கச் சோரிகள்
ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்
நடமிட அசுரர்கு லத்துக் காலனை – நிகராகி

நனிகடல் கதறபொ ருப்புத் தூளெழ
நணுகிய இமையவ ருக்குச் சீருற
நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பெறு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன – தனதான

இரு முலை மலை என ஒப்பிட்டே அவர்
இரு விழி அதனில் அகப்பட்டே மனம்
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் – இனிதோடே

இடை அது துவள குலுக்கிக் கால் அணி
பரிபுர ஒலிகள் தொனிக்கப் பூதர
இள முலை குழைய அணைத்து கேயூர – மணியோடே

மரகத பவளம் அழுத்திப் பூஷணம்
அணி பல சிதறி நெறித்துத் தான் உக
மரு மலர் புனுகு தரித்துப் பூ அணை- மத ராஜன்

மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என
மகிழ்வொடு ரசி(த்)து மிகுத்துக் கோதையை
மருவியும் உருகி களைத்து பூமியில் – உழல்வேனோ

திரிபுரம் எரிய நகைத்துக் காலனை
உதைபட மதனை அழித்துச் சாகர
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி – சிவனார் தம்

திரு அருள் முருக பெருத்துப் பாரினில்
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத
செயம் உறு அரி தன் மனத்துக்கு ஆகிய – மருகோனே

நரி கழு அதுகள் களிக்கச் சோரிகள்
ரண களம் முழுதும் மிகுத்துக் கூளிகள்
நடம் இட அசுரர் குலத்துக் காலனை – நிகர் ஆகி

நனி கடல் கதற பொருப்புத் தூள் எழ
நணுகிய இமையவருக்குச் சீர் உற
நணுகலர் மடிய தொலைத்துப் பேர் பெறு – பெருமாளே.

English

irumulai malaiyena oppit tEyavar
iruvizhi yathanila kappat tEmana
misaipada vasanamu raiththit tEpala – minithOdE

idaiyathu thuvaLaku lukkik kAlaNi
paripura volikaLtho nikkap pUthara
iLamulai kuzhaiyaa Naiththuk kEyura – maNiyOdE

mathakatha pavaLama zhuththip pUshaNa
maNipala sithaRine Riththuth thAnuka
marumalar punukutha riththup pUvaNai – matharAjan

maruviya kalavitha nakkop pAmena
makizhvodu rasithumi kuththuk kOthaiyai
maruviyu murukika Laiththup pUmiyi – luzhalvEnO

thiripura meriyana kaiththuk kAlanai
yuthaipada mathanaiya zhiththuc chAkara
thiraivaru kaduvaimi datRit RAnaNi – sivanArthan

thiruvaruL murukape ruththup pArinil
siyothanan madiyami kuththup pAratha
seyamuRu marithanma naththuk kAkiya – marukOnE

narikazhu vathukaLka Likkac chOrikaL
raNakaLa muzhuthumi kuththuk kULikaL
nadamida asurarku laththuk kAlanai – nikarAki

nanikadal kathaRapo rupputh thULezha
naNukiya imaiyava rukkuc cheeruRa
naNukalar madiyatho laiththup pErpeRu – perumALE.

English Easy Version

iru mulai malai ena oppittE avar
iru vizhi athanil akappattE manam
isai pada vasanam uraiththittE palam – inithOdE

idai athu thuvaLa kulukkik kAl aNi
paripura olikaL thonikkap pUthara
iLa mulai kuzhaiya aNaiththu kEyUra – maNiyOdE

marakatha pavaLam azhuththip pUshaNam
aNi pala sithaRi neRiththuth thAn uka
maru malar punuku thariththup pU aNai – matha rAjan

maruviya kalavi thanakku oppAm ena
makizhvodu rasi(th)thu mikuththuk kOthaiyai
maruviyum uruki kaLaiththu pUmiyil – uzhalvEnO

thiripuram eriya nakaiththuk kAlanai
uthaipada mathanai azhiththuc chAkara
thirai varu kaduvai midatRil thAn aNi – sivanAr tham

thiru aruL muruka peruththup pArinil
siyothanan madiya mikuththup pAratha
seyam uRu ari than manaththukku Akiya – marukOnE

nari kazhu athukaL kaLikkac chOrikaL
raNa kaLam muzhuthum mikuththuk kULikaL
nadam ida asurar kulaththuk kAlanai – nikar Aki

nani kadal kathaRa porupputh thUL ezha
naNukiya imaiyavarukkuc cheer uRa
naNukalar madiya tholaiththup pEr peRu – perumALE.