திருப்புகழ் 1137 உமை எனும் மயில் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1137 Umaienummayil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா – தனதான

உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே
உளமுரு கியபத்த ருறவே மறவே – னெனவோதி

உருகுத லொருசற்று மறியேன் வறியேன்
இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்
உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் – மடமாதர்

அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
அமுதென மதுரித்த கனிவா யணுகா
அமளியி லணைவுற்ற அநுரா கமகோ – ததிமூழ்கி

அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
கலவியி னலமற்ப சுகமா கினுமா
அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா – தியலாதே

தமனிய குலசக்ர கிரியோ கடலோ
விடமென முடிவைத்த முதுபே ரிருளோ
தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் – கொடுபார்வை

தழலெழ வருமுக்ர எமபா தகனோ
யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ
தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ – பதியாகி

இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ – பொரவாரும்

எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ
வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா – தனதான

உமை எனும் மயில் பெற்ற மயில் வாகனனே
வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே
உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் – என ஓதி

உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன்
இருவினை இடை இட்ட கொடியேன் அடியேன்
உணர்வு இலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் – மட மாதர்

அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா
அமுது என மதுரித்த கனி வாய் அணுகா
அமளியில் அணைவுற்ற அநுராக மகா – உததி மூழ்கி

அநவரதமும் உற்ற மணி மா முலை தோய்
கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது – இயலாதே

தமனிய குல சக்ர கிரியோ கடலோ
விடம் என முடி வைத்த முது பேர் இருளோ
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் – கொடு பார்வை

தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ
யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ
தனி இவன் என மிக்க பிசித அசன(ர்) – பூபதியாகி

இமையவர் அனைவர்க்கும் அறையோ அறையோ
அரி அயன் முழுதுக்கும் அறையோ அறையோ
எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ – பொர வாரும்

என வரும் ஒரு துட்டன் முறையோ முறையோ
வட குல கிரி எட்டும் அபிதா அபிதா
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் – பெருமாளே

English

umaiyenu mayilpetRa mayilvA kananE
vanithaiya raRuvarkku morupA lakanE
uLamuru kiyapaththa ruRavE maRavE – nenavOthi

urukutha lorusatRu maRiyEn vaRiyEn
iruvinai yidaiyitta kodiyE nadiyEn
uNarvili peRamuththi tharuvAy thukirvAy – madamAthar

amaiyena vaLarsithra iruthOL thazhuvA
amuthena mathuriththa kanivA yaNukA
amaLiyi laNaivutRa anurA kamakO – thathimUzhki

anavara thamumutRa maNimA mulaithOy
kalaviyi nalamaRpa sukamA kinumA
anupava mithusatRum vidavO iyalA – thiyalAthE

thamaniya kulachakra kiriyO kadalO
vidamena mudivaiththa muthupE riruLO
thanuvena munaiyitta kolaimU vilaivEl – kodupArvai

thazhalezha varumukra emapA thakanO
yukaiRu thiyilmikka vadavA nalamO
thaniyiva nenamikka pisithA sanapU – pathiyAki

imaiyava ranaivarkkum aRaiyO aRaiyO
ariyayan muzhuthukkum aRaiyO aRaiyO
ezhupuvi yulakukkum aRaiyO aRaiyO – poravArum

enavaru moruthuttan muRaiyO muRaiyO
vadakula kiriyettum apithA apithA
enavoru ayilthotta arasE yimaiyOr – perumALE.

English Easy Version

umai enum mayil petRa mayil vAkananE
vanithaiyar aRuvarkkum oru pAlakanE
uLam urukiya paththar uRavE maRavEn – ena Othi

urukuthal oru satRum aRiyEn vaRiyEn
iruvinai idai itta kodiyEn adiyEn
uNarvu ili peRa muththi tharuvAy thukir vAy – mada mAthar

amai ena vaLar chithra iru thOL thazhuvA
amuthu ena mathuriththa kani vAy aNukA
amaLiyil aNaivutRa anurAka makA – uthathi mUzhki

anavarathamum utRa maNi mA mulai thOy
kalaviyin nalam aRpa sukam Akinum mA
anupavam ithu satRum vidavO iyalAthu – iyalAthE

thamaniya kula sakra kiriyO kadalO
vidam ena mudi vaiththa muthu pEr iruLO
thanu ena munai itta kolai mU ilai vEl – kodu pArvai

thazhal ezha varum ukra ema pAthakanO
yuka iRuthiyil mikka vadavA analamO
thani ivan ena mikka pisitha asana(r) – pUpathiyAki

imaiyavar anaivarkkum aRaiyO aRaiyO
ari ayan muzhuthukkum aRaiyO aRaiyO
ezhu puvi ulakukkum aRaiyO aRaiyO – pora vArum

ena varum oru thuttan muRaiyO muRaiyO
vada kula kiri ettum apithA apithA
Ena oru ayil thotta arasE imaiyOr – perumALE