திருப்புகழ் 1138 உரைத்த பற்றுடன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1138 Uraiththapatrudan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத் – தனதான

உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்
டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்
றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் – டணைமேல்வீழ்ந்


துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்
டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த்
துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் – டுளம்வேறாய்

அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்
டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்
தறப்பி தற்றிட அமளிக லங்கித் – தடுமாறி

அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்
டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்
கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் – திடலாமோ

தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்
சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித்
தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் – பிறைசூடி

தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக்
கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்
தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் – தனிவேலா

பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்
திருக்கு முத்தம நிருதர்க லங்கப்
படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் – கிரிசாடிப்

படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்
குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்
பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத் – தனதான

உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு
இருத்தி மெத்தென இள நகையும் சற்று
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு – அணை மேல் வீழ்ந்து

உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு
எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு – உளம் வேறாய்

அருக்கியத்து அனை எனும் அவசம் பட்டு
அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து
அறப் பிதற்றிட அமளி கலங்கித் – தடுமாறி

அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு
அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு
அடுத்து அகப்படு கலவியில் நொந்து – எய்த்திடலாமோ

தரைக் கடல் புகு நிருதர் தயங்கச்
சளப்படத் தட முடிகள் பிடுங்கித்
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்டப் – பிறை சூடி

தனுக்கிரித் திரிதர எதிரும் கொக்கினைப்
பதைத்து உடல் அலறிட வஞ்சத்
தருக்கு அடக்கிய சமர் பொரு துங்கத் – தனி வேலா

பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து
இருக்கும் உத்தம நிருதர் கலங்கப்
படைப் பெலத்தொடு பழய க்ரவுஞ்சக் – கிரி சாடிப்

படர்ப் பறைக் குருகு உடல் உதிரம் குக்குடக்
கொடிக்கு இடு குமர கொடுங்கல்
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டிப் – பெருமாளே.

English

uraiththa patRuda nadikaLpa Ninthit
tiruththi meththena iLanakai yumchat
Rumizhththa daikkala menaethir kumpit – taNaimElveezhn


thuduththa potRuki lakalalku lunthot
teduththa Naiththithazh perukamu thanthuyth
thunakke nakkena vurukimu yangit – tuLamvERAy

arukki yaththanai yenumava sampat
taRuththo thukkiya nakanuthi yunthaith
thaRappi thatRida amaLika langith – thadumARi

aLaiththu zhaiththiru vizhikaLsi vanthit
tayarththi thaththodu mozhipava runthik
kaduththa kappadu kalaviyil nontheyth – thidalAmO

tharaikka daRpuku niruthartha yangac
chaLappa daththada mudikaLpi dungith
thakarththo liththezhu malaiyodu thuNdap – piRaicUdi

thanukki riththiri tharaethi rumkok
kinaippa thaiththuda lalaRida vanjath
tharukka dakkiya samarporu thungath – thanivElA

paruppa thapriya kuRumuni vanthith
thirukku muththama nirutharka langap
padaippe laththodu pazhayakra vunjak – kirisAdip

padarppa Raikkuru kudaluthi ranguk
kudakko dikkidu kumarako dungaR
pathaththi Ruththuku pasiyasi kaNdip – perumALE.

English Easy Version

uraiththa patRudan adikaL paNindhthittu
iruththi meththena iLa nakaiyum satRu
umizhththa adaikkalam ena ethir kumpittu – aNai mEl veezhnthu

uduththa pon thukil akal alkulum thottu
eduththu aNaiththu ithazh peruku amutham thuyththu
unakku enakku ena uruki muyangittu – uLam vERAy

arukkiyaththu anai enum avasam pattu
aRuththu othukkiya naka nuthiyum thaiththu
aRap pithatRida amaLi kalangith – thadumARi

aLaiththu uzhaiththu iru vizhikaL sivanthittu
ayarththu ithaththodu mozhipavar unthikku
aduththu akappadu kalaviyil nonthu – eyththidalAmO

tharaik kadal puku niruthar thayangac
chaLappadath thada mudikaL pidungith
thakarththu oliththu ezhu malaiyodu thuNdap – piRai cUdi

thanukkirith thirithara ethirum kokkinaip
pathaiththu udal alaRida vanjath
tharukku adakkiya samar poru thungath – thani vElA

paruppatha priya kuRumuni vanthiththu
irukkum uththama niruthar kalangap
padaip pelaththodu pazhaya kravunjak – kiri sAdip

padarp paRaik kuruku udal uthiram kukkudak
kodikku idu kumara kodungal
pathaththu iRuththu uku pasiya sikaNdip – perumALE