திருப்புகழ் 1139 உலகத்தினில் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1139 Ulagaththinil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன – தனதான

உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
உயர்துக்கமு மோடுற வென்றுற – வருகாலன்

உதிரத்துட னேசல மென்பொடு
உறுதிப்பட வேவள ருங்குடில்
உதிரக்கனல் மீதுற என்றனை – யொழியாமுன்

கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பத றாவுரை வென்றுயர்
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு – களிகூருங்

கவலைப்புல மோடுற என்துயர்
கழிவித்துன தாளிணை யன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திட – நினைவாயே

இலகப்பதி னாலுல கங்களும்
இருளைக்கடி வானெழு மம்புலி
யெழில்மிக்கிட வேணியில் வந்துற – எருதேறி

இருகைத்தல மான்மழு வும்புனை
யிறையப்பதி யாகிய இன்சொலன்
இசையப்பரி வோடினி தன்றரு – ளிளையோனே

மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
வலியற்றசு ரேசரு மங்கிட – வடிவேலால்

மலைவித்தக வானவ ரிந்திரர்
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
வடிவுற்றொரு தோகையில் வந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன – தனதான

உலகத்தினில் மாதரும் மைந்தரும்
உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
உயர் துக்கமுமோடு உறவு என்றுற – வரும் காலன்

உதிரத்துடனே சலம் என்பொடு
உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை – ஒழியா முன்

கலக கலை நூல் பல கொண்டு எதிர்
கதறி பதறா உரை வென்று உயர்
கயவர்க்கு உளனாய் வினைநெஞ்சொடு – களி கூரும்

கவலை புலமோடு உற என் துயர்
கழிவித்து உன தாள் இணை அன்பொடு
கருதி தொழும் வாழ்வது தந்திட – நினைவாயே

இலக பதினாலு உலகங்களும்
இருளை கடிவான் எழும் அம்புலி
எழில் மிக்கிட வேணியில் வந்து உற – எருது ஏறி

இரு கைத்தலம் மான் மழுவும் புனை
இறை அப்பதியாகிய இன் சொலன்
இசைய பரிவோடு இனிது அன்று அருள் – இளையோனே

மலை பட்டு இரு கூறு எழ வன் கடல்
நிலை கெட்டு அபிதா என அம் சகர்
வலி அற்ற அசுரேசரும் மங்கிட – வடிவேலால்

மலை வித்தக வானவர் இந்திரர்
மலர் கைகொடு மாதவரும் தொழ
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் – பெருமாளே

English

ulagaththinil mAdharu maindharum
uRu sutramum vAzhvod uRunkiLai
uyar dhukkamu mOduRa vendruRa – varukAlan

udhirath thudanE jalam enbodu
urudhip padavE vaLarung kudil
udhirak kanal meedhuRa endranai – ozhiyAmun

kalagak kalai nUl pala koNdedhir
kadhaRip padhaRA urai vendruyar
kayavark kuLanAy vinai nenjodu – kaLikUrum

kavalaip pulamOduRa enthuyar
kazhivith thuna thALinai anbodu
karudhith thozhum vAzhvadhu thandhida – ninaivAyE

ilagap padhinAl ulagangaLum
iruLaik kadivAn ezhum ambuli
ezhil mikkida vENiyil vandhuRa – erudhERi

irukaiththala mAn mazhuvum punai
iRai appathi yAgiya insolan
isaiyap parivOdini thandharuL – iLaiyOnE

malaipattiru kURezha vankadal
nilaiket abidhA ena anjagar
valiyatr asurEsaru mangida – vadivElAl

malai viththaga vAnavar indhirar
malark kaikkodu mA thavarum thozha
vadivutroRu thOgaiyil vandharuL – perumALE.

English Easy Version

ulagaththinil mAdharu maindharum
uRu sutramum vAzhvod uRunkiLai
uyar dhukkamu mOduRa vendruRa – varukAlan

udhirath thudanE jalam enbodu
urudhip padavE vaLarung kudil
Udhira kanal meedhuRa endranai – ozhiyAmun

kalagak kalai nUl pala koNdedhir
kadhaRip padhaRA urai vendruyar
kayavark kuLanAy vinai nenjodu – kaLikUrum

kavalaip pulamOduRa enthuyar
Kazhiviththu una thALinai anbodu
karudhith thozhum vAzhvadhu thandhida – ninaivAyE

ilagap padhinAl ulagangaLum
iruLaik kadivAn ezhum ambuli
ezhil mikkida vENiyil vandhuRa – erudhERi

irukaiththala mAn mazhuvum punai
iRai appathi yAgiya insolan
isaiyap parivOdini thandharuL – iLaiyOnE

malaipattiru kURezha vankadal
nilaiket(tu) abidhA ena anjagar
valiyatr asurEsaru mangida – vadivElAl

malai viththaga vAnavar indhirar
malark kaikkodu mA thavarum thozha
vadivutroRu thOgaiyil vandharuL – perumALE