Thiruppugal 1140 Uravinmuraikathari
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன – தந்ததான
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு – மந்தநாளில்
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் – அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் – வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து
மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் – வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட
பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் – நின்றநாகம்
பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய – வென்றதீரா
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் – குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்
குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன – தந்ததான
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற
பறை திமிலை முழவின் இசை ஆகாச(ம்) மீது உற
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் – அந்த நாளில்
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறு இரு கை
திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
உபய பதம் மிசை குலவு(ம்) சீர் ஏறு நூபுரமும் – அந்த மார்பும்
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய
மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் – வந்து கூட
மறலி படை யமபுரமும் மீது ஓடவே பொருது
விருது பல முறை முறையிலே ஊதி வாது செய்து
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இ(ங்)ஙன் – வந்திடாயோ
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ
அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலம் இட
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் – நின்ற நாகம்
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ .
பெரியது ஒரு வயிறுடைய மா காளி கூளியொடு
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய – வென்ற தீரா
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட
கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் – குன்று உலாவி
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய
ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள் செய்
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் – தம்பிரானே.
English
uRavin muRai kadhaRi azha UrArum AsaiyaRa
paRai thimilai muzhavin isai AkAsa meedhumuRa
ulagiluLa palararisi vAymeedhilE sOriyum – andha nALil
unadhu muka karuNai malar OrARum ARirukai
thiraLbuyamum ezhilpaNikoL vArkAdhu neeL vizhiyum
ubayapadha misaikulavu seerERu nUpuramum – andhamArbum
maRai aRaiya amarartharu pUmAriyE soriya
madhu ozhugu tharavil maNimeedhE munUloLira
mayilinmisai azhagupoli ALAy munAr adiyar – vandhukUda
maRali padai yamapuramu meedhOdavE porudhu
virudhupala muRai muRaiyilE Udhi vAdhu seydhu
madhalai oru kudhalai adi nAyEnai ALa ingan – vandhidAyO
piRaiyeyiRu muraNa surar pErAdhu pAril vizha
adhira ezhubuvi ulagam eerEzhum Olamida
pidigaLiRin adalniraigaL pAzhAgavE dhisaiyil – nindra nAgam
piriya nedumalai idiya mAvAri thULi ezha
periyadhoru vayiRudaiya mAkALi kULiyodu
piNaniNamum uNavu seydhu pEyOdum Adalseya – vendra dheerA
kuRamaRavar kodi adigaL kUsAdhu pOy varuda
karadi puli thirikadiya vArAna kAnil migu
kuLir kaNiyin iLamaramadhE Agi needi uyar – kundrulAvi
kodiyadhoru muyalaganin meedhAdu vArudaiya
orupuRama dhuRavaLaru mAthApeRA aruLsey
kumara gurupara amarar vAnAdar pENa aruL – thambiranE.
English Easy Version

Piriya nedumalai idiya mAvAri thULi ezha