திருப்புகழ் 1141 உறவு சிங்கிகள் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1141 Uravusingkigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன – தனதான

உறவு சிங்கிகள் காமா காரிகள்
முறைம சங்கிக ளாசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் – நகரேகை

உடைய கொங்கையின் மீதே தூசிகள்
பிணமெ னும்படி பேய்நீ ராகிய
உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் – கடல்ஞாலத்

தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்
அணிநெ ருங்கிக ளாசா பாஷண – மடமாதர்

அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
கலவி யின்பமெ னாவே சோருதல்
அலம லந்தடு மாறா தோர்கதி – யருள்வாயே

பறவை யென்கிற கூடார் மூவரண்
முறையி டுந்தமர் வானோர் தேரரி
பகழி குன்றவி லாலே நீறெழ – வொருமூவர்

பதநி னைந்துவி டாதே தாள் பெற
அருள்பு ரிந்தபி ரானார் மாபதி
பரவு கந்தசு வாமீ கானக – மதின்மேவுங்

குறவர் தங்கள்பி ரானே மாமரம்
நெறுநெ றென்றடி வேரோ டேநிலை
குலைய வென்றிகொள் வேலே யேவிய – புயவீரா

குயில்க ளன்றில்கள் கூகூ கூவென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
குறவர் சுந்தரி யோடே கூடிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன – தனதான

உறவு சிங்கிகள் காம ஆகாரிகள்
முறை மசங்கிகள் ஆசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் – நக ரேகை

உடைய கொங்கையின் மீதே தூசிகள்
பிணம் எனும் படி பேய் நீராகிய
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் – கடல் ஞாலத்து

அறவு நெஞ்சு பொ(ல்)லா மா பாவிகள்
வறுமை தந்திடு பாழ் மூதேவிகள்
அணி நெருங்கிகள் ஆசா பாஷண – மட மாதர்

அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள்
கலவி இன்பமே எனாவே சோருதல்
அலம் அலம் தடுமாறாது ஓர் கதி – அருள்வாயே

பறவை என்கிற கூடார் மூ அரண்
முறை இடும் தமர் வானோர் தேர் அரி
பகழி குன்ற(ம்) வி(ல்)லாலே நீறு எழ – ஒரு மூவர்

பத(ம்) நினைந்து விடாதே தாள் பெற
அருள் புரிந்த பிரானார் மா பதி
பரவு கந்த சுவாமீ கானகம் – அதில் மேவும்

குறவர் தங்கள் பிரானே மா மரம்
நெறு நெறு என்று அடி வேரோடு நிலை
குலைய வென்றி கொள் வேலே ஏவிய – புய வீரா

குயில்கள் அன்றில்கள் கூகூகூ என
மலர்கள் பொங்கிய தேன் வீழ் காமிசை
குறவர் சுந்தரியோடே கூடிய – பெருமாளே

English

uRavu singikaL kAmA kArikaL
muRaima sangika LAsA vEsikaL
uthadu kanRikaL nANA veeNikaL – nakarEkai

udaiya kongaiyin meethE thUsikaL
piName numpadi pEynee rAkiya
uNavai yuNdudai sOrkO mALikaL – kadalnjAlath

thaRavu nenjupo lAmA pAvikaL
vaRumai thanthidu pAzhmU thEvikaL
aNine rungika LAsA pAshaNa – madamAthar

azhaku yarnthapoy mAyA rUpikaL
kalavi yinpame nAvE sOruthal
alama lanthadu mARA thOrkathi – yaruLvAyE

paRavai yenkiRa kUdAr mUvaraN
muRaiyi dunthamar vAnOr thErari
pakazhi kunRavi lAlE neeRezha – vorumUvar

pathani nainthuvi dAthE thAL peRa
aruLpu rinthapi rAnAr mApathi
paravu kanthasu vAmee kAnaka – mathinmEvum

kuRavar thangaLpi rAnE mAmaram
neRune RenRadi vErO dEnilai
kulaiya venRikoL vElE yEviya – puyaveerA

kuyilka LanRilkaL kUkU kUvena
malarkaL pongiya thEnveezh kAmisai
kuRavar sunthari yOdE kUdiya – perumALE.

English Easy Version

uRavu singikaL kAma AkArikaL
muRai masangikaL AsA vEsikaL
uthadu kanRikaL nANA veeNikaL – naka rEkai

udaiya kongaiyin meethE thUsikaL
piNam enum padi pEy neerAkiya
uNavai uNdu udai sOr kOmALikaL – kadal njAlaththu

aRavu nenju po(l)lA mA pAvikaL
vaRumai thanthidu pAzh mUthEvikaL
aNi nerungikaL AsA pAshaNa – mada mAthar

azhaku uyarntha poy mAyA rUpikaL
kalavi inpamE enAvE sOruthal
alam alam thadumARAthu Or kathi – aruLvAyE

paRavai enkiRa kUdAr mU araN
muRai idum thamar vAnOr thEr ari
pakazhi kunRa(m) vi(l)lAlE neeRu ezha – oru mUvar

patha(m) ninainthu vidAthE thAL peRa
aruL purintha pirAnAr mA pathi
paravu kantha suvAmee kAnakam – athil mEvum

kuRavar thangaL pirAnE mA maram
neRu neRu enRu adi vErOdE nilai
kulaiya venRi koL vElE Eviya – puya veerA

kuyilkaL anRilkaL kUkUkU ena
malarkaL pongiya thEn veezh kAmisai
kuRavar sunthariyOdE kUdiya – perumALE.