திருப்புகழ் 1143 எட்டுடன் ஒரு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1143 Ettudanoru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன – தனதான

எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா மிகுபிணி
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் – நிலையாக

எப்படி யுயர்கதி நாமே றுவதென
எட்பகி ரினுமிது வோரார் தமதம
திச்சையி னிடருறு பேரா சைகொள்கட – லதிலேவீழ்

முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா மறுவரு
முற்றுத லறிவரு ஞானோ தயவொளி – வெளியாக

முக்குண மதுகெட நானா வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ – தொருநாளே

திட்டென எதிர்வரு மாகா ளியினொடு
திக்கிட தரிகிட தீதோ மெனவொரு
சித்திர வெகுவித வாதா டியபத – மலராளன்

செப்புக வெனமுன மோதா துணர்வது
சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்
தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் – குருநாதா

மட்டற அமர்பொரு சூரா திபனுடல்
பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு
மற்புய மரகத மாதோ கையில்நட – மிடுவோனே

வச்சிர கரதல வானோ ரதிபதி
பொற்புறு கரிபரி தேரோ டழகுற
வைத்திடு மருமக னேவா ழமரர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன – தனதான

எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசுமண்
கலம் இரு வினை தோயா மிகு பிணி
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் – நிலையாக

எப்படி உயர் கதி நாம் ஏறுவது என
எள் பகிரினும் இது ஓரார் தம தமது
இச்சையின் இடர் உறு பேராசை கொள் கடல் – அதிலே வீழ்

முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு
முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும்
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி – வெளியாக

முக்குணமது கெட நானா என வரும்
முத்திரை அழிதர ஆரா அமுது அ(ன்)ன
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது – ஒருநாளே

திட்டென எதிர் வரு மாகாளியினொடு
திக்கிட தரிகிட தீதோம் என ஒரு
சித்திர வெகுவித வாதாடிய பத – மலராளன்

செப்புக என முனம் ஓதாது உணர்வது
சிற் சுக பர வெளி ஈதே என அவர்
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் – குரு நாதா

மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல்
பொட்டு எழ முடுகி வை வேலால் எறி தரு
மல் புய மரகத மா தோகையில் நடம் – இடுவோனே

வச்சிர கர தல வானோர் அதிபதி
பொற்பு உறு கரி பரி தேரோடு அழகுற
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் – பெருமாளே.

English

ettudan oruthoLai vAyAyadhu pasu
matkalam iruvinai thOyA migupiNi
ittidai seya oru pOdhAgilum uyir – nilaiyAga

eppadi uyargathi nAm ERuvadhena
etpagirinum idhu OrAr thama thamadh
ichchaiyin idar uRu perAsaikoL kadal – adhilE veezh

muttarga NeRiyinil veezhA thadalodu
muppadhin aRupadhin mElAm aRuvaru
mutrudhal aRivaru nyAnOdhaya oLi – veLiyAga

mukguNam adhukeda nAnA enavaru
mudhdhirai azhithara ArA amudhana
muththamizh theri kani vAyAl aruLuvadh – orunALE

dhittena edhirvaru mAkALiyinodu
dhikkita tharikita dhee thOmena oru
chiththira veguvidha vAdhAdiya padha – malarALan

seppuga ena munam OdhAdh uNarvadhu
siRsuka paraveLi eedhE ena avar
dhekshaNa sevithanilE bOdhanai aruL – gurunAthA

mattaRa amarporu sUrA dhipan udal
pottezha mudugi vaivElAl eRitharum
maRbuya marakatha mAthOgaiyil nata – miduvOnE

vajjira karathala vAnOr adhipathi
poRpuRu karipari thErOd azhaguRa
vaiththidu marumaganE vAzh amarargaL – perumALE.

English Easy Version

ettudan oruthoLai vAyAyadhu pasumat
kalam iruvinai thOyA migupiNi
ittidai seya oru pOdhAgilum uyir – nilaiyAga

eppadi uyargathi nAm ERuvadhena
etpagirinum idhu OrAr thama thamadh
ichchaiyin idar uRu perAsaikoL kadal – adhilE veezh

muttarga NeRiyinil veezhAthu adalodu
muppadhin aRupadhin mElAm aRuvarum
Mutrudhal aRivaru nyAnOdhaya oLi – veLiyAga

mukguNam adhukeda nAnA enavaru
mudhdhirai azhithara ArA amudhana
muththamizh theri kani vAyAl aruLuvadh – orunALE

dhittena edhirvaru mAkALiyinodu
dhikkita tharikita dhee thOmena oru
chiththira veguvidha vAdhAdiya padha – malarALan

seppuga ena munam OdhAdh uNarvadhu
siRsuka paraveLi eedhE ena avar
dhekshaNa sevithanilE bOdhanai aruL – gurunAthA

mattaRa amarporu sUrA dhipan udal
pottezha mudugi vaivElAl eRitharum
maRbuya marakatha mAthOgaiyil nata – miduvOnE

vajjira karathala vAnOr adhipathi
poRpuRu karipari thErOd azhaguRa
vaiththidu marumaganE vAzh amarargaL – perumALE