Thiruppugal 1144 Eththiirukuzhai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன – தனதான
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
முட்டி யிடறியம தூதர் போலமுகி
லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை – யெதிர்சீறி
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
வெற்றி யரசுதனை யாள வீசியட
லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி – மடமாதர்
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை
மெத்தை தனிலுருகி மோக மாகிவிட – அதன்மேலே
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
மற்ற வரையழையு மாத ரேயெனமுன்
விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட – அருள்வாயே
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
அத்தி நகரமர சான வாள்நிருபன்
ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல – நிலைகூற
உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி – லசுரேசன்
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
பத்து மொருகணையில் வீழ நேரவுணர்
பட்டு மடியஅமர் மோது காளமுகில் – மருகோனே
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
துட்ட நிருதர்குல கால வானவர்கள்
பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன – தனதான
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில்
முட்டி இடறி யம தூதர் போல முகில்
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை – எதிர் சீறி
எத் திசையினும் ஒரு காம ராஜன் மிக
வெற்றி அரசு தனை ஆள வீசி அடல்
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி – மடமாதர்
வித்தை தனில் உருகி ஆசை ஆகி அவர்
கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை
மெத்தை தனில் உருகி மோகமாகி விட – அதன் மேலே
வெட்கம் இலை நடவும் ஏகும் ஏகும் இனி
மற்றவரை அழையும் மாதரே என முன்
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட – அருள்வாயே
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல்
அத்தி நகரம் அரசான வாள் நிருபன்
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகுபெல(ம்) – நிலை கூற
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன்
வெற்றி நகுல சகதேவர் தேர் தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் – அசுரேசன்
பத்து முடிகள் துகளாக வாகு இரு
பத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர்
பட்டு மடிய அமர் மோது(ம்) காள முகில் – மருகோனே
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக
துட்ட நிருதர் குலகால வானவர்கள்
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு – பெருமாளே
English
eththi yirukuzhaiyai mOthi meenamathin
mutti yidaRiyama thUthar pOlamuki
letti vayavarkara vALai vElmunaiyai – yethirseeRi
eththi saiyinumoru kAma rAjanmika
vetRi yarasuthanai yALa veesiyada
letRi yiLainjaruyir kOlu neelavizhi – madamAthar
viththai thaniluruki yAsai yAkiyavar
kaikkuL maruvuporu LAna Akumvarai
meththai thaniluruki mOka mAkivida – athanmElE
vetka milainadavu mEku mEkumini
matRa varaiyazhaiyu mAtha rEyenamun
vitta padiRikaLtham nEsa Asaikeda – aruLvAyE
oththa varikamuku vALai thAvupunal
aththi nakaramara sAna vALnirupan
okku ninaivumuni lAmal vAkupela – nilaikURa
utRa tharumanadal veeman vElvisaiyan
vetRi nakulasaka thEvar thErthanilum
oththu mudukividu pAkan vALamari – lasurEsan
paththu mudikaLthuka LAka vAkuiru
paththu morukaNaiyil veezha nEravuNar
pattu madiya amar mOthu kALamukil – marukOnE
pacchai mayililvaru veera vElmuruka
thutta nirutharkula kAla vAnavarkaL
paththi yudanadiyil veezha vAzhvuthavu – perumALE.
English Easy Version
eththi iru kuzhaiyai mOthi meenam athil
mutti idaRi yama thUthar pOla mukil
etti vayavar kara vALai vEl munaiyai – ethir seeRi
eth thisaiyinum oru kAma rAjan mika
vetRi arasu thanai ALa veesi adal
etRi iLainjar uyir kOlum neela vizhi – madamAthar
viththai thanil uruki Asai Aki avar
kaikkuL maruvu poruL Ana Akum varai
meththai thanil uruki mOkamAki vida – athan mElE
vetkam ilai nadavum Ekum Ekum ini
matRavarai azhaiyum mAtharE ena
mun vitta padiRikaL tham nEsa Asai keda – aruLvAyE
oththa vari kamuku vALai thAvu punal
aththi nakaram arasAna vAL nirupan
okku ninaivu mun ilAmal vAkupela(m) – nilai kURa
utRa tharuman adal veeman vEl visaiyan
vetRi nakula sakathEvar thEr thanilum
oththu mudukividu pAkan vAL amaril – asurEsan
paththu mudikaL thukaLAka vAku
irupaththum oru kaNaiyil veezha nEr avuNar
pattu madiya amar mOthu(m) kALa mukil – marukOnE
pacchai mayilil varum veera vEl muruka
thutta niruthar kulakAla vAnavarkaL
paththi udan adiyil veezha vAzhvu uthavu – perumALE