திருப்புகழ் 1145 ஒக்க வண்டெழு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1145 Okkavandezhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன – தந்ததான

ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட
உற்ப லங்கள்சி வந்துகு விந்திட – இந்த்ரகோபம்

ஒத்த தொண்டைது வண்டமு தந்தர
மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற
வொக்க மென்தொனி வந்துபி றந்திட – அன்புகூர

மிக்க சந்திர னொன்றுநி லங்களில்
விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட
மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ – ளின்பமாதர்

வித்த கந்தரு விந்துத புங்குழி
பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை
விட்ட கன்றுநி னம்புய மென்பத – மென்றுசேர்வேன்

மைக்க ருங்கட லன்றெரி மண்டிட
மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட
மற்று நன்பதி குன்றிய ழிந்திட – வும்பர்நாடன்

வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற
மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற
மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை – நுங்கும்வேலா

குக்கு டங்கொடி கொண்டப ரம்பர
சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ்
கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர – ணங்கிகாரா

கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய
மிக்க வங்கண கங்கண திண்புய
கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய – தம்பிரானே.

பதம் பிரித்தது

தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன – தந்ததான

ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட
வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட – இந்த்ர கோபம்

ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர
மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட – அன்பு கூர

மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில்
விக்ரமம் செய்து இலங்கு நகம் பட
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் – இன்ப மாதர்

வித்தகம் தரு விந்து த(ப்)பும் குழி
பட்டு அழிந்து நலங்கு குரம்பையை
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் – என்று சேர்வேன்

மைக் கருங் கடல் அன்று எரி மண்டிட
மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட
மற்று நன் பதி குன்றி அழிந்திட – உம்பர் நாடன்

வச்சிரம் கை அணிந்து பதம் பெற
மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற
மத்த வெம்சின வஞ்சகர் தங்களை – நுங்கும் வேலா

குக்குடம் கொடி கொண்ட பரம்பர
சக்ர மண்டலம் எண் திசையும் புகழ்
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் – அங்கிகாரா

கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய
மிக்க வங்கண கங்கண திண் புய
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய – தம்பிரானே.

English

okka vaNdezhu koNdaiku lainthida
veRpe nungana kongaiku zhainthida
uRpa langaLsi vanthuku vinthida – inthrakOpam

oththa thoNdaithu vaNdamu thanthara
mecchu thumpika rumkuyil menpuRa
vokka menthoni vanthupi Ranthida – anpukUra

mikka chanthira nonRuni langaLil
vikra manjeythi languna kampada
meththa menporu LanpaLa vunthuva – LinpamAthar

viththa kantharu vinthutha pumkuzhi
patta zhinthuna languku rampaiyai
vitta kanRuni nampuya menpatha – menRusErvEn

maikka rumkada lanReri maNdida
meykra vunjasi lampudal vempida
matRu nanpathi kunRiya zhinthida – vumparnAdan

vacchi rangaiya Ninthupa thampeRa
mecchu kunjari kongaipu yampeRa
maththa vemchina vanjakar thangaLai – nungumvElA

kukku damkodi koNdapa rampara
chakra maNdala meNdisai yampukazh
kotka konRaiya Ninthasi ranchara – NangikArA

koththa vizhnthaka dampalar thangiya
mikka vangaNa kangaNa thiNpuya
kotRa vanguRa mangaivi rumpiya – thambirAnE.

English Easy Version

okka vaNdu ezhu koNdai kulainthida
veRpu enum kana kongai kuzhainthida
uRpalangaL sivanthu kuvinthida – inthra kOpam

oththa thoNdai thuvaNdu amutham thara
mecchu thumpi karum kuyil men puRavu
okka men thoni vanthu piRanthida – anpu kUra

mikka chanthiran onRu nilangaLil
vikramam seythu ilangu nakam pada
meththa men poruL anpu aLavum thuvaL – inpa mAthar

viththakam tharu vinthu tha(p)pum kuzhi
pattu azhinthu nalangu kurampaiyai
vittu akanRu nin ampuyam men patham – enRu sErvEn

maik karum kadal anRu eri maNdida
mey kravunja silampu udal vempida
matRu nan pathi kunRi azhinthida – umpar nAdan

vacchiram kai aNinthu patham peRa
mecchu kunjari kongai puyam peRa
maththa vemchina vanjakar thangaLai – nungum vElA

kukkudam kodi koNda parampara
chakra maNdalam eN thisaiyum pukazh
kotka konRai aNintha siram charaN – angikArA

koththu avizhntha kadampu alar thangiya
mikka vangaNa kangaNa thiN puya
kotRam am kuRa mangai virumpiya – thambirAnE