திருப்புகழ் 1146 ஓது வித்தவர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1146 Odhuviththavar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன – தனதான

ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர்
ஊச லிற்கன லாயெரி காளையர் – மறையோர்கள்

ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள்
ஓடி யுத்தம ரூதிய நாடின – ரிரவோருக்

கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை – யிகழ்வோர்கள்

ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர – குழல்வாரே

தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச – சசசாச

தாட டட்டட டாடட டாடட
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி – டிடிடீடீ

தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு – செகுசேகு

சேயெ னப்பல ராடிட மாகலை
ஆயு முத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திர மாக நிணாடிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன – தனதான

ஓது வித்தவர் கூலி கொடாதவர்
மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் – மறையோர்கள்

ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர் தனக்கும் உதாசின தாரிகள்
ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் – இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை – இகழ்வோர்கள்

ஏக சித்த தியானம் இலாதவர்
மோகம் உற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு – உழல்வாரே

தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச – சசசாச

தாட டட்டட டாடட டாடட
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி – டிடிடீடீ

தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு – செகுசேகு சே

எனப் பலர் ஆடிட மா கலை
ஆயும் உத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திரமாக நின்று ஆடிய – பெருமாளே.

English

Odhu viththavar kUliko dAthavar
mAtha varkkathi pAthaka mAnavar
Usa liRkana lAyeri kALaiyar – maRaiyOrkaL

Urtha nakkida rEseyu mEzhaikaL
Artha nakkumu thAsina thArikaL
Odi yuththama rUthiya nAdina – riravOruk

kEthu miththanai thAnami dAthavar
pUtha laththini lOrama thAnavar
eesar vishNuvai sEvaisey vOrthamai – yikazhvOrkaL

Eka siththathi yAnami lAthavar
mOka mutRidu pOkitha mURinar
eena riththanai pErkaLu mEzhnara – kuzhalvArE

thAtha thaththatha thAthatha thAthatha
thUthu thuththuthu thUthuthu thUthuthu
sAsa sassasa sAsasa sAsasa – sasasAsa

thAda daddada dAdada dAdada
dUdu duddudu dUdudu dUdudu
thAdi diddidi deedidi deedidi – didideedee

theethi thiththithi theethithi theethithi
thOthi kuththiku thOthiku thOthiku
sEku sekkuku sEkuku sEkuku – sekusEku

sEye nappala rAdida mAkalai
Ayu muththamar kURidum vAsaka
sEku siththira mAka niNAdiya – perumALE.

English Easy Version

Othu viththavar kUli kodAthavar
mAthavarkku athi pAthakam Anavar
Usalil kanalAy eri kALaiyar – maRaiyOrkaL

Ur thanakku idarE seyum EzkaikaL
Ar thanakkum uthAsina thArikaL
Odi uththamar Uthiyam nAdinar – iravOrukku

Ethum iththanai thAnam idAthavar
pUthalaththinil Orama thAnavar
eesar vishNuvai sEvai seyvOr thamai – ikazhvOrkaL

Eka siththa thiyAnam ilAthavar
mOkam utRidu pOkitham URinar
eenar iththanai pErkaLum Ezh naraku – uzhalvArE

thAtha thaththatha thAthatha thAthatha
thUthu thuththuthu thUthuthu thUthuthu
sAsa sassasa sAsasa sAsasa – sasasAsa

thAda daddada dAdada dAdada
dUdu duddudu dUdudu dUdudu
thAdi diddidi deedidi deedidi – didideedee

theethi thiththithi theethithi theethithi
thOthi kuththiku thOthiku thOthiku
sEku sekkuku sEkuku sEkuku – sekusEku

sE enap palar Adida mA kalai
Ayum uththamar kURidum vAsaka
sEku siththiramAka ninRu Adiya – perumALE.