திருப்புகழ் 1147 ஓலை தரித்த குழை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1147 Olaithariththakuzhai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன – தந்ததான

ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
லோதிநி ழற்குள ளிக்கு லத்துட – னொன்றிஞானம்

ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
யூடுவி டத்தையி ருத்தி வைத்தக – ணம்பினாலே

மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
வாவென முற்றிந டத்தி யுட்புகு – மந்தமாதர்

மாயம யக்கையொ ழித்து மெத்தென
வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் – தந்திடாதோ

வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந – ளன்கைமேலே

வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
வீடண னுக்கருள் வைத்த வற்றமை – யன்கள்மாளக்

காலயி லக்கணை தொட்ட ருட்கன
மாலமை திக்கரை யிற்ற ரித்துல
காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் – தந்தகாமன்

காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்ததி னைப்பு னத்தொரு
காதல்மி குத்துமி கப்ர மித்தருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன – தந்ததான

ஓலை தரித்த குழைக்கும் அப்புறம்
ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல்
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் – ஒன்றி ஞானம்

ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர்
ஓகை செலுத்தி வடுப்படுத்து
அகி ஊடு விடத்தை இருத்தி வைத்த கண் – அம்பினாலே

மாலை மயக்கை விளைத்து நல் பொருள்
வாச முலைக்குள் அகப்படுத்தி இல்
வா என முற்றி நடத்தி உள் புகும் – அந்த மாதர்

மாய மயக்கை ஒழித்து மெத்தென
வானவருக்கு அருள் உற்ற அக்ஷர
வாய்மை எனக்கும் இனித்து அளித்து அருள் – தந்திடாதோ

வேலை அடைக்க அரி குலத்தொடு
வேணும் என சொ(ல்)லும் அக்கணத்தினில்
வேகமொடு அப்பு மலை குலத்தை – நளன் கை மேலே

வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை
மேவி அரக்கர் பதிக்குள் முற்பட
வீடணனுக்கு அருள் வைத்து அவன் – தமையன்கள் மாள

கால் அயில் அக் கணை தொட்ட அருள் கனமால்
அமைதிக் கரையில் தரித்து உலகு
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் – தந்த காமன்

காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்த தினைப் புனத்து ஒரு
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் – தம்பிரானே.

English

Olaitha riththaku zhaikku mappuRa
mOdini Raththuma tharththu neyththaRa
lOthini zhaRkuLa Likku laththuda – nonRinjAnam

Othimi kuththatha vaththa varkkida
rOkaise luththiva duppa duththaki
yUduvi daththaiyi ruththi vaiththaka – NampinAlE

mAlaima yakkaivi Laiththu naRporuL
vAsamu laikkuLa kappa duththiyil
vAvena mutRina daththi yutpuku – manthamAthar

mAyama yakkaiyo zhiththu meththena
vAnava rukkaru LutRa akshara
vAymaiye nakkumi niththa LiththaruL – thanthidAthO

vElaiya daikkaa rikku laththodu
vENume naccholu makka Naththinil
vEkamo dappuma laikku laththaina – LankaimElE

veesaa vatRinai yoppa mittaNai
mEviya rakkarpa thikkuL muRpada
veedaNa nukkaruL vaiththa vatRamai – yankaLmALak

kAlayi lakkaNai thotta rutkana
mAlamai thikkarai yitRa riththula
kALaa Liththapra puthva rutkadal – thanthakAman

kAyamo zhiththavar petRa kotRava
nAnila viththathi naippu naththoru
kAthalmi kuththumi kapra miththaruL – thambirAnE.

English Easy Version

Olai thariththa kuzhaikkum appuRam
Odi niRaththu matharththu neyththa aRal
Othi nizhaRkuL aLi kulaththudan – onRi njAnam

Othi mikuththa thavaththavarkku idar
Okai seluththi vaduppaduththu aki Udu
vidaththai iruththi vaiththa kaN – ampinAlE

mAlai mayakkai viLaiththu nal poruL
vAsa mulaikkuL akappaduththi il
vA ena mutRi nadaththi uL pukum – antha mAthar

mAya mayakkai ozhiththu meththena
vAnavarukku aruL utRa akshara
vAymai enakkum iniththu aLiththu – aruL thanthidAthO

vElai adaikka ari kulaththodu
vENum ena so (l)lum akkaNaththinil
vEkamodu appu malai kulaththai – naLan kai mElE

veesa avatRinai oppam ittu aNai
mEvi arakkar pathikkuL muRpada
veedaNanukku aruL vaiththu avan – thamaiyankaL mALa

kAl ayil ak kaNai thotta aruL kanamAl
amaithik karaiyil thariththu ulaku
ALa aLiththa praputhva aruL kadal – thantha kAman

kAyam ozhiththavar petRa kotRava
nAnila viththa thinaip punaththu oru
kAthal mikuththu mika pramiththu aruL – thambirAnE