Thiruppugal 1148 Kadaisivandhagandru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன – தனதான
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு
குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்
கரிய கண்துறந் தவர்நி றந்தொளை – படவோடக்
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட
முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்
கவர இங்கிதங் கெறுவி தம்பெற – விளையாடும்
படைம தன்பெருங் கிளைதி ருந்திய
அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி
பணிநி தம்பஇன் பசுக முந்தர – முதிர்காம
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக
பதம டைந்திருந் தருள்பொ ருந்தும – தொருநாளே
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட
மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட
வருபு ரந்தரன் தனபு ரம்பெற – முதுகோப
மகர வெங்கருங் கடலொ டுங்கிட
நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற
வனச னின்றழும் படிநெ ருங்கிய – வொருசூதம்
அடியொ டும்பிடுங் கியத டங்கர
வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய
அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி – யநுராக
அவச மும்புனைந் தறமு னைந்தெழு
பருவ தஞ்சிறந் தகன தந்தியின்
அமுத மென்குயங் களின்மு யங்கிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன – தனதான
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு
குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர்
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை – பட ஓட
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட
முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர்
கவர இங்கிதம் கெறுவிதம் பெற – விளையாடும்
படை மதன் பெரும் கிளை திருந்திய
அதர கிஞ்சுகம் தனை உணர்ந்து அணி
பணி நிதம்ப(ம்) இன்ப சுகமும் தர – முதிர் காம
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு
மவுன பஞ்சரம் பயில் தரும் சுக
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்தும் – அது ஒரு நாளே
வட நெடும் சிலம்புகள் புலம்பிட
மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட
வரு புரந்தரன் தன புரம் பெற – முது கோப
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட
நிசிசரன் பெரும் குலம் ஓருங்கிற
வனசன் நின்று அழும்படி நெருங்கிய – ஒரு சூதம்
அடியொடும் பிடுங்கிய தடம் கர
வடிவ அம் சுரும்பு உற விரும்பிய
அடவியும் தொழும்பொடு தொழும்படி – அனுராக
அவசமும் புனைந்து அற முனைந்து எழு
பருவதம் சிறந்த கன தந்தியின்
அமுத மென் குயங்களில் முயங்கிய – பெருமாளே.
English
kadaisi vanthakan Ruraipu kanRiru
kuzhaiyai yunthuran tharipa ranthoLir
kariya kaNthuRan thavarni RanthoLai – padavOdak
kalaine kizhnthirung kuzhalsa rinthida
mulaisu manthasain thidaiyo sinthuyir
kavara ingithang keRuvi thampeRa – viLaiyAdum
padaima thanperung kiLaithi runthiya
athara kinjukan thanaiyu NarnthaNi
paNini thampa-in pasuka munthara – muthirkAma
parava santhaNin thunaiyu Narnthoru
mavuna panjaram payiltha rumsuka
pathama dainthirun tharuLpo runthuma – thorunALE
vadane dumsilam pukaLpu lampida
makitha lampaiyang koduma kizhnthida
varupu rantharan thanapu rampeRa – muthukOpa
makara vengarung kadalo dungida
nisisa ranperung kulamo rungiRa
vanasa ninRazhum padine rungiya – vorucUtham
adiyo dumpidung kiyatha dangara
vadiva anjurum puRavi rumpiya
adavi yunthozhum podutho zhumpadi – yanurAka
avasa mumpunain thaRamu nainthezhu
paruva thanjchiRan thakana thanthiyin
amutha menkuyang kaLinmu yangiya – perumALE.
English Easy Version
kadai sivanthu akanRu urai pukanRu iru
kuzhaiyaiyum thuranthu ari paranthu oLir
kariya kaN thuRanthavar niRam thoLai – pada Oda
kalai nekizhnthu irum kuzhal sarinthida
mulai sumanthu asainthu idai osinthu uyir
kavara ingitham keRuvitham peRa – viLaiyAdum
padai mathan perum kiLai thirunthiya
athara kinjukam thanai uNarnthu aNi
paNi nithampa(m) inpa sukamum thara – muthir kAma
paravasam thaNinthu unai uNarnthu oru
mavuna panjaram payil tharum suka
patham adainthu irunthu aruL porunthum athu – oru nALE
vada nedum silampukaL pulampida
makithalam priyam kodu makizhnthida
varu purantharan thana puram peRa – muthu kOpa
makara vem karum kadal odungida
nisisaran perum kulam OrungiRa
vanasan ninRu azhumpadi nerungiya – oru cUtham
adiyodum pidungiya thadam kara
Vadiva am surumpu uRa virumpiya
adaviyum thozhumpodu thozhumpadi – anurAka
avasamum punainthu aRa munainthu ezhu
paruvatham siRantha kana thanthiyin
amutha men kuyangaLil muyangiya – perumALE