திருப்புகழ் 1149 கதறிய கலைகொடு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1149 Kadhariyakalaikodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன – தந்ததான

கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
கருவற இருவினை கெட்டாற் காண்வரு – மென்றஏகங்

கருகிய வினைமன துட்டாக் காதது
சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
கசடற முழுதையும் விட்டாற் சேர்வது – ணர்ந்திடாதே

விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு – புண்டரீக

ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
விரகுடை விழிவலை பட்டாற் றாதுந – லங்கலாமோ

பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
பருகென வனமுலை கிட்டாத் தாரகை – தந்துநாளும்

பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
படர்வன பரிமள முட்டாட் டாமரை – தங்கிவாழுஞ்

சததள அமளியை விட்டாற் றேறிய
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ – வென்றகோவே

தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
மழகிய கலவிதெ விட்டாக் காதலி
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன – தந்ததான

கதறிய கலை கொடு சுட்டாத் தீர் பொருள்
பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி
கரு அற இரு வினை கெட்டாற்(கு) காண் வரும் – என்ற ஏகம்

கருகிய வினை மனதுள் தாக்காதது
சுருதிகள் உருகி ஒர் வட்டாயத் தோய்வது
கசடு அற முழுதையும் விட்டால் சேர்வ(து) – உணர்ந்திடாதே

வித மதுகர(ம்) முரல் மொட்டால் சாடிய
ரதி பதி என வரு(ம்) துட்ட ஆத்மாவுடன்
வினை புரிபவர் இடும் முற்றாச் சால் இரு – புண்டரீக

ம்ருகமத முகுளித மொட்டால் கார் முக(ம்)
நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயக(ம்)
விரகு உடை விழி வலை பட்டால் தாது – நலங்கலாமோ

பத மலர் மிசை கழல் கட்டாப் பாலக
சுருதிகள் அடி தொழ எட்டாத் தேசிக
பருகு என வன முலை கிட்டாத் தாரகை – தந்து நாளும்

பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு
படுகையினிடை புழு எட்டாப் பாசடை
படர்வன பரிமள முள் தாள் தாமரை – தங்கி வாழும்

சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய
சல நிதி குறுகிட ஒட்டாச் சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய்த் தூள் எழ – வென்ற கோவே

தழை தரு குழை தரு பட்டாள் சாலவும்
அழகிய கலவி தெவிட்டாக் காதலி
தலை மக நிலம் அடி தட்டாத் தேவர்கள் – தம்பிரானே.

English

kathaRiya kalaikodu suttAth theerporuL
pathaRiya samayika LettAp pEroLi
karuvaRa iruvinai kettAR kANvaru – menRaEkang

karukiya vinaimana thuttAk kAthathu
suruthika Lurukiyor vattAith thOyvathu
kasadaRa muzhuthaiyum vittAR sErvathu – NarnthidAthE

vithamathu karamural mottAR cAdiya
rathipathi yenavaru thuttAth mAvudan
vinaipuri pavaridu mutRAc cAliru – puNdareeka

mrukamatha mukuLitha mottAR kArmuka
nuthalezhu thiyasiRu pottAR cAyaka
virakudai vizhivalai pattAt RAthuna – langalAmO

pathamalar misaikazhal kattAp pAlaka
suruthika Ladithozha ettAth thEsika
parukena vanamulai kittAth thArakai – thanthunALum

parivuRa vekumuka nettAt RUdoru
padukaiyi nidaipuzhu vettAp pAsadai
padarvana parimaLa muttAt tAmarai – thangivAzhunj

sathathaLa amaLiyai vittAt RERiya
salanithi kuRukida vottAc cUrodu
thamaniya kulakiri pottAyth thULezha – venRakOvE

thazhaitharu kuzhaitharu pattAt cAlavu
mazhakiya kalavithe vittAk kAthali
thalaimaka nilamadi thattAth thEvrkaL – thambirAnE.

English Easy Version

kathaRiya kalai kodu suttAth theer poruL
pathaRiya samayikaL ettAp pEroLi
karu aRa iru vinai kettAR(ku) kAN varum – enRa Ekam

karukiya vinai manathuL thAkkAthathu
suruthikaL uruki or vattAith thOyvathu
kasadu aRa muzhuthaiyum vittAl sErva(thu) – uNarnthidAthE

vitha mathukara(m) mural mottAl sAdiya
rathi pathi ena varu(m) thutta AthmAvudan
vinai puripavar idum mutRAc cAl iru – puNdareeka

mrukamatha mukuLitha mottAl kAr muka(m)
nuthal ezhuthiya siRu pottAl sAyaka(m)
viraku udai vizhi valai pattAl thAthu – nalangalAmO

patha malar misai kazhal kattAp pAlaka
suruthikaL adi thozha ettAth thEsika
paruku ena vana mulai kittAth thArakai – thanthu nALum

parivuRa veku muka nettu AtRUdu oru
Padukaiyinidai puzhu ettAp pAsadai
padarvana parimaLa muL thAL thAmarai – thangi vAzhum

satha thaLa amaLiyai vittu AtRu ERiya
sala nithi kuRukida ottAc cUrodu
thamaniya kulakiri pottAyth thUL ezha – venRa kOvE

thazhai tharu kuzhai tharu pattAL sAlavum
azhakiya kalavi thevittAk kAthali
thalai maka nilam adi thattAth thEvarkaL – thambirAnE