திருப்புகழ் 1150 கலவியி னலமுரை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1150 Kalaviyinalamurai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தானன தானந்
தனத் தனந்தன தனன தான தனதன
தானான தான தனனந் தானந்
தனன தாத்தன தானத் தானத் தானத் – தாத்தன தனதான

கலவியி னலமுரை யாமட வார்சந்
தனத் தனங்களில் வசம தாகி யவரவர்
பாதாதி கேச மளவும் பாடுங்
கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் – தூர்த்தனை யபராதக்

கபடனை வெகுபரி தாபனை நாளும்
ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை
ஆசார வீன சமயந் தோறுங்
களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் – சாத்திர நெறிபோயைம்

புலன்வழி யொழுகிய மோகனை மூகந்
தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு
மாதேச வாழ்வை நிலையென் றேயம்
புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் – பூக்கழ லிணைசேரப்

பொறியிலி தனையதி பாவியை நீடுங்
குணத் ரயங்களும் வரும நேக வினைகளு
மாயாவி கார முழுதுஞ் சாடும்
பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் – காப்பது மொருநாளே

குலகிரி தருமபி ராம மயூரம்
ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு
வாராவு லாவி யுணரும் யோகங்
குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் – பார்த்தரு ளியபார்வைக்

குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்
றதற் கநந்தர மிரணி யாய நமவென
நாராய ணாய நமவென் றோதுங்
குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் – றோற்றிய வசபாணிப்

பலநக நுதியி னிசாசர னாகங்
கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்
தோண்மாலை யாக அணியுங் கோவும்
பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் – பாற்பணி யிறைவாகைப்

படமுக வடலயி ராபத மேறும்
ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட
வேலேவி வாவி மகரஞ் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் – தாக்கிய பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தானன தானந்
தனத் தனந்தன தனன தான தனதன
தானான தான தனனந் தானந்
தனன தாத்தன தானத் தானத் தானத் – தாத்தன தனதான

கலவியின் நலம் உரையா மடவார்
சந்தனத் தனங்களில் வசமது ஆகி அவரவர்
பாதாதி கேசம் அளவும் பாடும்
கவிஞனாய் திரிவேனைக் காம க்ரோத – தூர்த்தனை அபராதக்

கபடனை வெகு பரிதாபனை நாளும்
ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறை முறை
ஆசார ஈன சமயம் தோறும்
களவு சாத்திரம் ஓதிச் சாதித்தேனை – சாத்திர நெறி போய்


ஐம்புலன் வழி ஒழுகிய மோகனை மூகம்
தனில் பிறந்து ஒரு நொடியின் மீள அழி தரும்
ஆதேச வாழ்வை நிலை என்றே
அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை – பூக்கழல் இணை சேரப்

பொறியிலிதனை அதி பாவியை நீடும்
குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளு(ம்)
மாயா விகார(ம்) முழுதும் சாடும்
பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனைக் – காப்பதும் ஒருநாளே

குலகிரி தரும் அபிராம மயூரம்
ப்ரியப்படும் படி குவளை வாச மலர் கொடு
வாரா உலாவி உணரும் யோகம்
குலைய வீக்கிய வேளைக் கோபித்து ஏறப் – பார்த்து அருளிய பார்வை

குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு .
அனந்தரம் இரணியாய நம என .
நாராயணாய நம என்று ஓதும்
குதலை வாய்ச் சிறியோனுக்காகத் – தூணில் தோற்றிய வச பாணிப்

பல நக நுதியில் நிசாசரன் ஆகம்
கிழித்து அளைந்து அணி துளசியோடு சிறு குடல்
தோள் மாலையாக அணியும் கோவும்
பரவி வாழ்த்திடவே கற்று ஆரச் – சோதிப்பான் பணி இறை

வாகைப் பட முக அடல் அபிராபதம் ஏறும்
ப்ரபுப் பயம் கெடவட பராரை வரை கெட
வேல் ஏவி வாவி மகரம் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர் கெட்டு ஓடத் தாக்கிய – பெருமாளே.

English

kalaviyi nalamurai yAmada vArsan
thanath thanangaLil vasama thAki yavaravar
pAthAthi kEsa maLavum pAdung
kavinja nAyththiri vEnaik kAmak rOthath – thUrththanai yaparAthak

kapadanai vekupari thApanai nALum
pramik kunenjanai uruva mARi muRaimuRai
AsAra veena samayan thORung
kaLavu sAththira mOthic chAthith thEnai – sAththira neRipOyaim

pulanvazhi yozhukiya mOkanai mUkan
thaniR piRanthoru nodiyin meeLa azhitharu
mAthEsa vAzhvai nilaiyen REyam
puviyin mERpasu pAsath thEpat tEnaip – pUkkazha liNaisErap

poRiyili thanaiyathi pAviyai needung
kuNath rayangaLum varuma nEka vinaikaLu
mAyAvi kAra muzhuthunj chAdum
poruLin mERsiRi thAsaip pAdat REnaik – kAppathu morunALE

kulakiri tharumapi rAma mayUram
priyap padumpadi kuvaLai vAsa malarkodu
vArAvu lAvi yuNarum yOkang
kulaiya veekkiya vELaik kOpith thERap – pArththaru LiyapArvaik

kurisilu morusurar pUsura nOmen
RathaR kananthara miraNi yAya namavena
nArAya NAya namaven ROthung
kuthalai vAycchiRi yOnuk kAkath thUNit – ROtRiya vasapANip

palanaka nuthiyi nisAsara nAkang
kizhith thaLainthaNi thuLasi yOdu siRukudal
thONmAlai yAka aNiyung kOvum
paravi vAzhththida vEkat RArac chOthip – pARpaNi yiRaivAkaip

padamuka vadalayi rApatha mERum
prapup payangeda vadapa rArai varaikeda
vElEvi vAvi makaranj cheeRum
paravai kUppida mOthic cUrket tOdath – thAkkiya perumALE.

English Easy Version

kalaviyin nalam uraiyA madavAr
santhanath thanangaLil vasamathu Aki avaravar
pAthAthi kEsam aLavum pAdum
kavinjanAy thirivEnaik kAma krOtha – thUrththanai aparAthak


kapadanai veku parithApanai nALum
pramikku nenjanai uruva mARi muRaimuRai
AsAra eena samayam thORum
kaLavu sAththiram Othic chAthiththEnai – sAththira neRi pOy

aimpulan vazhi ozhukiya mOkanai mUkam
thanil piRanthu oru nodiyin meeLa azhi tharum
AthEsa vAzhvai nilai enRE
am puviyin mEl pasu pAsaththE pattEnai – pUkkazhal iNai sErap

poRiyilithanai athi pAviyai needum
kuNa thrayangaLum varum anEka vinaikaLu(m)
mAyA vikAra(m) muzhuthum sAdum
poruLin mEl siRithu AsaippAdu atREnaik – kAppathum orunALE

kulakiri tharum apirAma mayUram
priyappadum padi kuvaLai vAsa malar kodu
vArA ulAvi uNarum yOkam
kulaiya veekkiya vELaik kOpiththu ERap – pArththu aruLiya pArvai

Kurisilum oru surar pUsuran Om enRathaRku
anantharam iraNiyAya nama ena
nArAyaNAya nama enRu Othum
kuthalai vAyc chiRiyOnukkAkath – thUNil thOtRiya vasa pANip

pala naka nuthiyil nisAsaran Akam
kizhiththu aLainthu aNi thuLasiyOdu siRu kudal
thOL mAlaiyAka aNiyum kOvum
paravi vAzhththidavE katRu Arac – chOthippAn paNi iRai

vAkaip pada muka adal ayirApatham ERum
prapup payam keda vada parArai varai keda
vEl Evi vAvi makaram seeRum
paravai kUppida mOthic cUr kettu Odath thAkkiya – perumALE.,