திருப்புகழ் 1152 குறிப்பரிய குழல் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1152 Kurippariyakuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன – தனதான

குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
குழைக்கும்வடு விழிக்குமெழு – குமிழாலுங்


கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு
தினுக்குமிக வுறத்தழுவு – குறியாலும்

அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
ரடிக்குமிள நகைக்குமுள – மயராதே


அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமல – மருள்வாயே


கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கணத்திலவர் நிணத்தகுடல் – கதிர்வேலாற்

கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
யளித்திடரை யறுத்தருளு – மயில்வீரா

செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் – பெருகானிற்

செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமு னுறத்தழுவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன – தனதான

குறிப்பு அரிய குழற்கு(ம்) மதி நுதல் புருவ வி(ல்)லுக்கும் இரு
குழைக்கும் வடு விழிக்கும் எழு – குமிழாலும்

கொடிப் பவள இதழ்க்கு(ம்) மிகு சுடர்த் தரள நகைக்கும்
அமுதினுக்கு(ம்) மிக உறத் தழுவு – குறியாலும்

அறப் பெரிய தனக்கும் அ(ன்)ன நடைக்கும் மினின் இடைக்கும் மலர்
அடிக்கும் இள நகைக்கும் உளம் – அயராதே

அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரிப்பிரமர்
அளப்பரிய பதக் கமலம் – அருள்வாயே

கறுத்து அடரும் அரக்கர் அணி கருக் குலைய நெருக்கி ஒரு
கணத்தில் அவர் நிணத்த குடல் – கதிர் வேலால்

கறுத்தருளி அலக்கண் உறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை
அளித்து இடரை அறுத்து அருளு(ம்) – மயில் வீரா

செறுத்து வரு கரித் திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி
சினத்தினொடு பறித்து அமர் செய் – பெரு கானில்

செலக் கருதி அறக் கொடிய சிலைக் குறவர் கொடித் தனது
சிமிழ்த் தனமும் உறத் தழுவு(ம்) – பெருமாளே.

English

kuRippariya kuzhaRkumathi nuthaRpuruva vilukkumiru
kuzhaikkumvadu vizhikkumezhu – kumizhAlung


kodippavaLa ithazhkkumiku sudarththaraLa nakaikkumamu
thinukkumika vuRaththazhuvu – kuRiyAlum

aRapperiya thanakkumana nadaikkumini nidaikkumala
radikkumiLa nakaikkumuLa – mayarAthE


akaththiyano duraiththaporu LaLiththaruLi arippiramar
aLappariya pathakkamala – maruLvAyE

kaRuththadaru marakkaraNi karukkulaiya nerukkiyoru
kaNaththilavar niNaththakudal – kathirvElAR

kaRuththaruLi yalakkaNuRu surarkkavarkaL pathikkurimai
yaLiththidarai yaRuththaruLu – mayilveerA

seRuththuvaru kariththiraLkaL thidukkidaval maruppaiyari
sinaththinodu paRiththamarsey – perukAniR

selakkaruthi yaRakkodiya silaikkuRavar kodiththanathu
chimizhththanamu nuRaththazhuvu – perumALE.

English Easy Version

kuRippu ariya kuzhaRku(m) mathi nuthal puruva vi(l)lukkum iru
kuzhaikkum vadu vizhikkum ezhu – kumizhAlum

kodip pavaLa ithazhkku(m) miku sudarth tharaLa nakaikkum
amuthinukku(m) mika uRath thazhuvu – kuRiyAlum

aRap periya thanakkum a(n)na nadaikkum minin idaikkum malar
adikkum iLa nakaikkum uLam – ayarAthE

akaththiyanodu uraiththa poruL aLiththu aruLi arippiramar
aLappariya pathak kamalam – aruLvAyE

kaRuththu adarum arakkar aNi karuk kulaiya nerukki oru
kaNaththil avar niNaththa kudal – kathir vElAl

kaRuththaruLi alakkaN uRu surarkku avarkaL pathikku urimai
aLiththu idarai aRuththu aruLu(m) – mayil veerA

seRuththu varu karith thiraLkaL thidukkida val maruppai ari
sinaththinodu paRiththu amar sey – peru kAnil

selak karuthi aRak kodiya silaik kuRavar kodith thanathu
chimizhth thanamum uRath thazhuvu(m) – perumALE