திருப்புகழ் 1153 குனகியொரு மயில் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1153 Kunagiyorumayil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான – தனதான

குனகியொரு மயில்போல வாராம னோலீலை
விளையவினை நினையாம லேயேகி மீளாத
கொடியமன தநியாய மாபாத காபோதி – யெனஆசைக்

கொளுவஅதில் மயலாகி வீறோடு போய்நீள
மலரமளி தனிலேறி யாமாறு போமாறு
குலவிநல மொழிகூறி வாரேறு பூணார – முலைமூழ்கி

மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி – யநுராக

வகைவகையி லதிமோக வாராழி யூடான
பொருளளவ தளவாக யாரோடு மாலான
வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற – அருள்வாயே

எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
இசையுமொழி தவறாம லேயேகி மாமாது – மிளையோனும்


இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி – யுயிர்சீறி

அநுமனொடு கவிகூட வாராக நீராழி
யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப – நிருதேசன்

அருணமணி திகழ்பார வீராக ராமோலி
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான – தனதான

குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை
விளைய வினை நினையாமலே ஏகி மீளாத
கொடிய மனத அநியாய மா பாத காபோதி – என ஆசைக்

கொளுவ அதில் மயலாகி வீறோடு போய் நீள
மலர் அமளி தனில் ஏறி ஆமாறு போமாறு
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார – முலை மூழ்கி

மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல்
விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள
மதிவதனம் ஒளி வீச நீராளமாய் மேவி – அநுராக

வகை வகையில் அதி மோக வாராழி ஊடான
பொருள் அளவு அது அளவாக யாரோடு(ம்) மால் ஆன
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற – அருள்வாயே

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில்
என விரகு குலையாத மாதாவு(ம்) நேர் ஓத
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாது(ம்) – இளையோனும்

இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி
குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள
இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி – உயிர் சீறி

அநுமனொடு கவி கூட வாராக(ம்) நீர் ஆழி
அடை செய்து அணை தனில் ஏறி மா பாவி ஊர் மேவி
அவுணர் கிளை கெட நூறி ஆலால(ம்) மா கோப – நிருதேசன்

அருண மணி திகழ் பார வீராகரா மோலி
ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் – பெருமாளே

English

kunakiyoru mayilpOla vArAma nOleelai
viLaiyavinai ninaiyAma lEyEki meeLAtha
kodiyamana thaniyAya mApAtha kApOthi – yenaAsaik

koLuva-athil mayalAki veeROdu pOyneeLa
malaramaLi thanilERi yAmARu pOmARu
kulavinala mozhikURi vArERu pUNAra – mulaimUzhki

manamuruka matharAja kOlAdu mApUsal
viLaiyavizhi suzhalAdi mElOthi pOymeeLa
mathivathana moLiveesa neerALa mAymEvi – yanurAka

vakaivakaiyi lathimOka vArAzhi yUdAna
poruLaLava thaLavAka yArOdu mAlAna
vanithaiyarkaL vasamAya nAyEnu meedERa – aruLvAyE

enathumozhi vazhuvAmal neeyEku kAnmeethi
lenaviraku kulaiyAtha mAthAvu nErOtha
isaiyumozhi thavaRAma lEyEki mAmAthu – miLaiyOnum

inimaiyodu varumAya mAreesa mAnAvi
kulaiyavaru karathUsha NAveerar pOrmALa
iRukinedu maramEzhu thULAka vEvAli – yuyirseeRi

anumanodu kavikUda vArAka neerAzhi
yadaiseythaNai thanilERi mApAvi yUrmEvi
avuNarkiLai kedanURi yAlAla mAkOpa – niruthEsan

aruNamaNi thikazhpAra veerAka rAmOli
yorupathumor kaNaiveezha vEmOthu pOrALi
adalmaruka kumarEsa mElAya vAnOrkaL – perumALE.

English Easy Version

kunaki oru mayil pOla vArA manO leelai
viLaiya vinai ninaiyAmalE Eki meeLAtha
kodiya manatha aniyAya mA pAtha kApOthi – ena Asaik

koLuva athil mayalAki veeROdu pOy neeLa
malar amaLi thanil ERi AmARu pOmARu
kulavi nala mozhi kURi vAr ERu pUNAra – mulai mUzhki

manam uruka matha rAja kOl Adu mA pUsal
viLaiya vizhi suzhalAdi mEl Othi pOy meeLa
mathivathanam oLi veesa neerALamAy mEvi – anurAaka

vakai vakaiyil athi mOka vArAzhi UdAna
poruL aLavu athu aLavAka yArOdu(m) mAl Ana
vanithaiyarkaL vasamAya nAyEnum eedERa – aruLvAyE

enathu mozhi vazhuvAmal nee Eku kAn meethil
ena viraku kulaiyAtha mAthAvu(m) nEr Otha
isaiyum mozhi thavaRAmalE Eki mA mAthu(m) – iLaiyOnum

Inimaiyodu varu mAya mAreesa mAn Avi
kulaiya varu kara thUshaNA veerar pOr mALa
iRuki nedu maram Ezhu thULAkavE vAli – uyir seeRi

anumanodu kavi kUda vArAka(m) neer Azhi
adai seythu aNai thanil ERi mA pAvi Ur mEvi
avuNar kiLai keda nURi AlAla(m) mA kOpa – niruthEsan

aruNa maNi thikazh pAra veerAkarA mOli
oru pathum or kaNai veezhavE mOthu pOrALi
adal maruka kumarEsa mElAya vAnOrkaL – perumALE