திருப்புகழ் 1155 கோழையாய் ஆணவம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1155 Kozhaiyaianavam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனா தனன தத்த, தானனா தனன தத்த
தானனா தனன தத்த – தனதான

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
கோதுசே ரிழிகு லத்தர் – குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
கோவுநா னெனஇ சைப்பர் – மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
ஆசுசேர் கலியு கத்தி – னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு
ளாகையா லவைய டக்க – வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
ஈசன்மேல் வெயிலெ றிக்க – மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே யினிதி ருக்க – வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
வேதனா ரையும் விடுத்து – முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
வீறுசேர் சிலை யெடுத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானனா தனன தத்த, தானனா தனன தத்த
தானனா தனன தத்த – தனதான

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர்
கோது சேர் இழி குலத்தர் – குல மேன்மை

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர
கோவு(ம்) நான் என இசைப்பர் – மிடி ஊடே

ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர்
ஆசு சேர் கலி யுகத்தின் – நெறி ஈதே

ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அ(ல்)ல அதற்குள்
ஆகையால் அவை அடக்க – உரை ஈதே

ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர
ஈசன் மேல் வெயில் எறிக்க – மதி வேணி

ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில்
ஏறியே இனிது இருக்க – வருவோனே

வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து
வேதனாரையும் விடுத்து – முடி சூடி

வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த
வீறு சேர் சிலை எடுத்த – பெருமாளே.

English

kOzhaiyA Navami kuththa veeramE pukalvar aRpar
kOthusE rizhiku laththar – kulamEnmai

kURiyE naduvi ruppar sORidAr tharuma puthra
kOvunA nenai saippar – midiyUdE

AzhuvAr nithiyu daikku pEranA menai saippar
AsusEr kaliyu kaththi – neRiyeethE

AyunU laRivu ketta nAnumvE Rala athaRku
LAkaiyA lavaiya dakka – vuraiyeethE

EzhaivA navara zhaikka AnaivA savanu ruthra
eesanmEl veyile Rikka – mathivENi

eesanAr thamathi dukka mARiyE kayilai veRpil
ERiyE yinithi rukka – varuvOnE

vEzhamee thuRaiyum vajra thEvarkO siRaivi duththu
vEthanA raiyum viduththu – mudicUdi

veeracU ravan mudikku LERiyE kazhuku koththa
veeRusEr silai yeduththa – perumALE.

English Easy Version

kOzhaiyAy ANavam mikuththa veeramE pukalvar aRpar
kOthu sEr izhi kulaththar – kula mEnmai

kURiyE nadu iruppar sORu idAr tharuma puthra
kOvu(m) nAn ena isaippar – midi UdE

AzhuvAr nithi udai kupEranAm ena isaippar
Asu sEr kali yukaththin – neRi eethE

Ayu nUl aRivu ketta nAnum vERu a(l)la athaRkuL
AkaiyAl avai adakka – urai eethE

Ezhai vAnavar azhaikka Anai vAsavan uruthra
eesan mEl veyil eRikka – mathi vENi

eesanAr thamathu idukkam mARiyE kayilai veRpil
ERiyE inithu irukka – varuvOnE

vEzham meethu uRaiyum vajra thEvar kO siRai viduththu
vEthanAraiyum viduththu – mudi cUdi

veera cUr avan mudikkuL ERiyE kazhuku koththa
veeRu sEr silai eduththa – perumALE.,