Thiruppugal 1157 Surudhivegumuga
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பேத வாதிகள் – என்றுமோடித்
தொடர வுணரஅரி தாய தூரிய
பொருளை யணுகியநு போக மானவை
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய – நின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்
பெருகு பரமசுக மாம கோததி
கருணை யடியரொடு கூடியாடிம – கிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரிய
கிரண சரண அபி ராம கோமள
கமல யுகளமற வாது பாடநி – னைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடு
கருது மலகைமுலை கோதி வீதியில்
மதுகை யொடுதறுக ணானை வீரிட – வென்றுதாளால்
வலிய சகடிடறி மாய மாய்மடி
படிய நடைபழகி யாயர் பாடியில்
வளரு முகில்மருக வேல்வி நோதசி – கண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை சாடிய
விஜய கடதடக போல வாரண
விபுதை புளகதன பார பூஷண – அங்கிராத
விமலை நகிலருண வாகு பூதர
விபுத கடககிரி மேரு பூதர
விகட சமரசத கோடி வானவர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுக புராண கோடிகள்
சரியை கிரியை மக யோக மோகிகள்
துரித பர சமய பேத வாதிகள் – என்றும் ஓடி
தொடர உணர அரிதாய தூரிய
பொருளை அணுகி அநுபோகமானவை
தொலைய இனிய ஒரு ஸ்வாமியாகிய – நின் ப்ரகாசம்
கருதி உருகி அவிரோதியாய் அருள்
பெருகு பரம சுக மா மகா உததி
கருணை அடியரொடு கூடி ஆடி – மகிழ்ந்து நீபக்
கனக மணி வயிர நூபுர ஆரிய
கிரண சரண அபிராம கோமள
கமல உகளம் மறவாது பாட – நினைந்திடாதோ
மருது நெறு நெறு என மோதி வேரோடு
கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை – வீரிட வென்று தாளால்
வலிய சகடு இடறி மாயமாய் மடி
படிய நடை பழகி ஆயர் பாடியில்
வளரும் முகில் மருக வேல் விநோத – சிகண்டி வீரா
விருதர் நிருதர் குல சேனை சாடிய
விஜய கட தட கபோல வாரண
விபுதை புளக தன பார பூஷண – அம் கிராத
விமலை நகில் அருண வாகு பூதர
விபுத கடக கிரி மேரு பூதர
விகட சமர சத கோடி வானவர் – தம்பிரானே.
English
suruthi vekumukapu rANa kOdikaL
sariyai kiriyaimaka yOka mOkikaL
thuritha parasamaya pEtha vAthikaL – enRumOdith
thodara vuNara ari thAya thUriya
poruLai yaNukiyanu pOka mAnavai
tholaiya iniyavoru SvAmi yAkiya – ninprakAsam
karuthi yurukiyavi rOthi yAyaruL
peruku paramasuka mAma kOthathi
karuNai yadiyarodu kUdiyAdima – kizhnthuneepak
kanaka maNivayira nUpu rAriya
kiraNa saraNa api rAma kOmaLa
kamala yukaLamaRa vAthu pAdani – nainthidAthO
maruthu neRuneRena mOthi vErOdu
karuthu malakaimulai kOthi veethiyil
mathukai yoduthaRuka NAnai veerida – venRuthALAl
valiya sakadidaRi mAya mAymadi
padiya nadaipazhaki yAyar pAdiyil
vaLaru mukilmaruka vElvi nOthasi – kaNdiveerA
viruthar nirutharkula sEnai sAdiya
vijaya kadathadaka pOla vAraNa
viputhai puLakathana pAra pUshaNa – angirAtha
vimalai nakilaruNa vAku pUthara
viputha kadakakiri mEru pUthara
vikada samarasatha kOdi vAnavar – thambirAnE.
English Easy Version
suruthi vekumuka purANa kOdikaL
sariyai kiriyai maka yOka mOkikaL
thuritha para samaya pEtha vAthikaL – enRum Odi
thodara uNara arithAya thUriya
poruLai aNuki anupOkamAnavai
tholaiya iniya oru SvAmiyAkiya – nin prakAsam
karuthi uruki avirOthiyAy aruL
peruku parama suka mA makA uthathi
karuNai adiyarodu kUdi Adi – makizhnthu neepak
kanaka maNi vayira nUpura Ariya
kiraNa saraNa apirAma kOmaLa
kamala ukaLam maRavAthu pAda – ninainthidAthO
maruthu neRu neRu ena mOthi vErOdu
karuthum alakai mulai kOthi veethiyil
mathukaiyodu thaRukaN Anai – veerida venRu thALAl
valiya sakadu idaRi mAyamAy madi
padiya nadai pazhaki Ayar pAdiyil
vaLarum mukil maruka vEl vinOtha – sikaNdi veerA
viruthar niruthar kula sEnai sAdiya
Vijaya kada thada kapOla vAraNa
viputhai puLaka thana pAra pUshaNa – am kirAtha
vimalai nakil aruNa vAku pUthara
viputha kadaka kiri mEru pUthara
vikada samara satha kOdi vAnavar – thambirAnE