திருப்புகழ் 1159 செம் கனல் புகை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1159 Semkanalpugai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன – தனதான

செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
தெண்டெ னத்துணை தாள்மேல்விழ – அமராடிச்

சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில
திண்டி றற்றவ வாள்வீரரொ – டிகலாநின்

றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
மந்தி பட்டிருள் மூடாவகை – யவிரோத


அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
லன்பு வைத்தரு ளாமோர்கழ – லருளாதோ

கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி
கும்பி டத்தகு பாகீரதி – மதிமீது


கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
குண்ட லத்தர்பி னாகாயுத – ருடனேயச்

சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
தங்க ளைச்சிறை மீளாயென – அசுரேசன்

தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன – தனதான

செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள்
தெண்டு எனத் துணை தாள் மேல் விழ – அமர் ஆடி

சிந்தனைப் படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில
திண் திறல் தவ வாள் வீரரொடு – இகலா நின்று

அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம்
அந்தி பட்டு இருள் மூடா வகை – அவிரோத

அந்த நிற் குண ஞான உதய சுந்தரச் சுடர் ஆராய நல்
அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் – அருளாதோ

கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி
கும்பிடத் தகு பாகீரதி – மதி மீது

கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதரம்
குண்டல அத்தர் பினாக – ஆயுதருடனே ஏயச்

சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர்
தங்களைச் சிறை மீளாய் என – அசுரேசன்

தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீர ஆகர
சண்ட விக்ரம வேல் ஏவிய – பெருமாளே.

English

senka naRpukai yOmAthikaL kuNda mittezhu sOmAsikaL
theNde naththuNai thALmElvizha – amarAdi

sintha naippadi mOkAthiyi linthri yaththini lOdAsila
thiNdi RatRava vALveeraro – dikalAnin

Rangam vettiya kUrvALvizhi mangai yarkkaRa mAlAymana
manthi pattiruL mUdAvakai – yavirOtha

antha niRkuNa njAnOthaya suntha racchuda rArAyana
lanpu vaiththaru LAmOrkazha – laruLAthO

konga duththaku rAmAlikai thaNka dukkaithu zhAythAthaki
kumpi daththaku pAkeerathi – mathimeethu

koNda sithraka lAcUdikai yiNde rukkaNi kAkOthara
kuNda laththarpi nAkAyutha – rudanEya

sangu sakraka thApANiyu menga Lukkoru vAzhvEsurar
thanga LaicchiRai meeLAyena – asurEsan

thanja matRida vEthAkara nanja veRpuka veerAkara
saNda vikrama vElEviya – perumALE.

English Easy Version

sem kanal pukai OmAthikaL kuNdam ittu ezhu sOmAsikaL
theNdu enath thuNai thAL mEl vizha – amar Adi

sinthanaip padi mOkAthiyil inthriyaththinil OdA sila
thiN thiRal thava vAL veerarodu – ikalA ninRu

angam vettiya kUr vAL vizhi mangaiyarkku aRa mAlAy manam
anthi pattu iruL mUdA vakai – avirOtha

antha niR kuNa njAna uthaya suntharac chudar ArAya nal
anpu vaiththu aruL Am Or kazhal – aruLAthO

kongu aduththa kurA mAlikai thaN kadukkai thuzhAy thAthaki kumpidath thaku pAkeerathi – mathi meethu

koNda sithra kalAcUdikai iNdu erukku aNi kAkOtharam
kuNdala aththar pinAka – AyutharudanE Eya

sangu sakra kathA pANiyum engaLukku oru vAzhvE surar
thangaLais siRai meeLAy ena – asurEsan

thanjam atRida vEthAkaran anja veRpu uka veera Akara
saNda vikrama vEl Eviya – perumALE.,