Thiruppugal 1160 Selaiadarththualam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் – தனதான
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
தூறுசிவப் பேறுவிழிக் – கணையாலே
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
தேறலெனக் கூறுமொழிச் – செயலாலே
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
தாலுமிதத் தாலும்வளைப் – பிடுவோர்மேல்
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
றாளிணையைச் சேரஎனக் – கருள்வாயே
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
காயஎரித் தேவிதியிற் – றலையூடே
காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
தேறிவகித் தூருதிரைக் – கடல்மீதில்
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
றாடியிடத் தேயுமைபெற் – றருள்வாழ்வே
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
டாதுலருக் காறுமுகப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் – தனதான
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையைச் சீறு விதித்து
ஊறு சிவப்பு ஏறு விழிக் – கணையாலே
தேன் இரதத்தே முழுகிப் பாகு நிகர்த்து ஆர் அமுதத்
தேறல் எனக் கூறும் மொழிச் – செயலாலே
ஆல் இலையைப் போலும் வயிற்றால் அளகத்தால்
அதரத்தாலும் இதத்தாலும் வளைப்பிடுவோர் – மேல்
ஆசையினைத் தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல்
தாள் இணையைச் சேர எனக்கு – அருள்வாயே
காலனை மெய்ப் பாதம் எடுத்தே உதையிட்டே மதனைக்
காய எரித்தே விதியின் – தலை ஊடே
காசினியில் காண இரப்பு ஓர் மதியைச் சூடி எருத்து
ஏறி வகித்து ஊரு திரைக் – கடல் மீதில்
ஆலம் மிடற்று ஆனை உரித்துத் தோலை உடுத்து ஈமம் அது உற்று
ஆடி இடத்தே உமை பெற்று – அருள் வாழ்வே
ஆழியினைச் சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட
ஆதுலருக்கு ஆறு முகப் – பெருமாளே.
English
sElaiyadarth thAlamikuth thEyuzhaiyaic ceeRuvithith
thURusivap pERuvizhik – kaNaiyAlE
thEnirathath thEmuzhukip pAkunikarth thAramuthath
thERalenak kURumozhic – ceyalAlE
Alilaiyaip pOlumvayit RAlaLakath thAlatharath
thAlumithath thAlumvaLaip – piduvOrmEl
Asaiyinaith thUraviduth thEpukazhvut REpriyanat
RALiNaiyaic cEraenak – karuLvAyE
kAlanaimeyp pAthameduth thEyuthaiyit tEmathanaik
kAyaerith thEvithiyit – RalaiyUdE
kAsiniyiR kANairap pOrmathiyaic cUdiyeruth
thERivakith thUruthiraik – kadalmeethil
Alamidat RAnaiyurith thOlaiyuduth theemamathut
RAdiyidath thEyumaipet – RaruLvAzhvE
Azhiyinaic cUranaiveR pEzhinaiyut REyayilvit
tAthularuk kARumukap – perumALE.
English Easy Version
sElai adarththu Alam mikuththE uzhaiyais seeRu vithiththu
URu sivappu ERu vizhik – kaNaiyAlE
thEn irathaththE muzhukip pAku nikarththu Ar amuthath
thERal enak kURum mozhic – ceyalAlE
Al ilaiyaip pOlum vayitRAl aLakaththAl atharaththAlum
ithaththAlum vaLaippiduvOr – mEl
Asaiyinaith thUra viduththE pukazhvuRRE priya nal
thAL iNaiyais sEra enakku – aruLvAyE
kAlanai meyp pAtham eduththE uthaiyittE mathanaik
kAya eriththE vithiyin – thalai UdE
kAsiniyil kANa irappu Or mathiyaic cUdi eruththu
ERi vakiththu Uru thiraik – kadal meethil
Alam midatRu Anai uriththuth thOlai uduththu eemam athu utRu
Adi idaththE umai petRu – aruL vAzhvE
Azhiyinaic cUranai veRpu Ezhinai utRE ayil vitta
Athularukku ARu mukap – perumALE