திருப்புகழ் 1161 சொக்குப் பொட்டு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1161 Sokkuppottu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன – தனதான

சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் – முலைமீதே

சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக் கொப்பென
சொற்பித்துக் கற்பிற் செப்பிய – துயராலே

சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்
தித்திப்பிற் கொத்துப் பித்துயர் – கொடுநாயேன்

திக்குக்கெட் டொட்டுச் சிட்டென
பட்டத்துற் புத்திக் கட்டற
செப்பத்துற் பற்றற் கற்புத – மருள்வாயே

தக்குத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ – விருதோதை

தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை
சத்திக்கொற் றத்திற் குத்திய – முருகோனே

துக்கித்திட் டத்தித் துக்கக
நெக்குப்பட் டெக்கித் துட்டறு
சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு – ளருள்வேலா

துற்றப்பொற் பச்சைக் கட்கல
பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன – தனதான

சொக்குப் பொட்டு எத்திக் கைப்பொருளைக்
கெத்தில் பற்றிச் சிக்கொடு
சுற்றுப்பட்டு எற்றித் தெட்டிகள் – முலை மீதே

சுற்றுப் பொன் பட்டுக் கச்சினர்
முற்று இக்குத் தத்தைக்கு ஒப்பு என
சொல் பித்துக் கற்பில் செப்பிய – துயராலே

சிக்குப்பட்டு உட்கிப் பல் கொடு
எற்றிக் கைக்குத்துப் பட்டு இதழ்
தித்திப்பிற்கு ஒத்துப் பித்து உயர் – கொடு நாயேன்

திக்குக் கெட்டு ஒட்டுச் சிட்டு என
பட்ட அத் துற்புத்திக் கட்டு அற
செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் – அருள்வாயே

தக்குத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத் திக்கு எட்டுப் பொட்டு எழ – விருது ஓதை

தத் தித்தித் தித்தித் தித்தென
துட்டக் கட்டர்ப் படை
சத்திக் கொற்றத்தில் குத்திய – முருகோனே

துக்கித்திட்ட அத்தித் துக்க அக(ம்)
நெக்குப்பட்டு எக்கித் துட்டு அறு
சுத்தப் பொன் பத்தர்க்குப் பொருள் – அருள் வேலா

துற்றப் பொன் பச்சைக் கண் கலபச்
சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கு அர்த்தத்தைச் சுட்டிய – பெருமாளே.

English

chokkuppot teththik kaipporu
LaikkeththiR patRic chikkodu
sutRuppat tetRith thettikaL – mulaimeethE

sutRuppoR pattuk kacchinar
mutRikkuth thaththaik koppena
soRpiththuk kaRpiR cheppiya – thuyarAlE

sikkuppat tutkip paRkodu
vetRikkaik kuththup pattithazh
thiththippiR koththup piththuyar – kodunAyEn

thikkukket tottuc chittena
pattaththuR puththik kattaRa
seppaththuR patRaR kaRputha – maruLvAyE

thakkuththak kukkuk kukkuda
thattuttut tuttut tuttena
thakkuththik kettup pottezha – viruthOthai

thaththiththith thiththith thiththena
thetRuththut takkat tarppadai
saththikkot RaththiR kuththiya – murukOnE

thukkiththit taththith thukkaka
nekkuppat tekkith thuttaRu
suththappoR paththark kupporu – LaruLvElA

thutRappoR pacchaik katkala
pacchithrap pakshik kotRava
sokkarkkarth thaththaic chuttiya – perumALE.

English Easy Version

chokkup pottu eththik kaipporuLaik
keththil patRic chikkodu
sutRuppattu etRith thettikaL – mulai meethE

sutRup pon pattuk kacchinar
mutRu ikkuth thaththaikku oppu ena
sol piththuk kaRpil seppiya – thuyarAlE

sikkuppattu utkip pal kodu
etRik kaikkuththup pattu ithazh
thiththippiRku oththup piththu uyar – kodu nAyEn

thikkuk kettu ottuc chittu ena
patta ath thuRpuththik kattu aRa
seppaththu un patRaRku aRputham – aruLvAyE

thakkuththak kukkuk kukkuda
thattuttut tuttut tuttena
thakkuth thikku ettup pottu ezha – viruthu Othai

thath thiththith thiththith thiththena
thetRu thuttak kattarp padai
saththik kotRaththil kuththiya – murukOnE

thukkiththitta aththith thukka aka(m)
nekkuppattu ekkith thuttu aRu
suththap pon paththarkkup poruL – aruL vElA

thutRap pon pacchaik kaN kalapac
chithrap pakshik kotRava sokkarkku
arththaththaic chuttiya – perumALE.