Thiruppugal 1162 Gnanavibushani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன – தனதான
ஞானாவி பூஷணி காரணி காரணி
காமாவி மோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவிகு ணாதரி – உமையாள்தன்
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
வேதாக மேயருள் தேவர்கள் தேவந
லீசாச டாபர மேசர்சர் வேசுரி – முருகோனே
தேனார்மொ ழீவளி நாயகி நாயக
வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
சேணாளு மானின்ம னோகர மாகிய – மணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்
மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
சீராக வேகலை யாலுனை ஓதவும் – அருள்வாயே
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
சூராடி யேகழு மீதினி லேறிட
கூனான மீனனி டேறிட கூடலில் – வருவோனே
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
கூறாக வாளிதொ டூரகு நாயகன்
பூவாய னாரணன் மாயனி ராகவன் – மருகோனே
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
சேணாடு ளோரவர் வீடதி டேறிட
கோனாக வேவரு நாதகு ரூபர – குமரேசா
வாசாம கோசர மாகிய வாசக
தேசாதி யோரவர் பாதம தேதொழ
பாசாவி நாசக னாகவு மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன – தனதான
ஞானா விபூஷணி கார் அணி காரணி
காமா விமோகினி வாகினி யாமளை
மா மாயி பார்வதி தேவி குணாதரி – உமையாள் தன்
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக
வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி – முருகோனே
தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக
வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய – மணவாளா
சீர்பாத சேகரன் ஆகவு நாயினன்
மோகா விகார விடாய்கெட ஓடவெ
சீராகவே கலையால் உனை ஓதவும் – அருள்வாயே
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை
சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட
கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் – வருவோனே
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு
கூறாக வாளி தொடூ ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் – மருகோனே
வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ
சேண் நாடு உளோர் அவர் வீடது ஈடேறிட
கோன் ஆகவே வரு நாத குரூ பர – குமரேசா
வாசா மகோசரமாகிய வாசக
தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசா விநாசகனாகவும் மேவிய – பெருமாளே.
English
gnAnAvi bUshaNi kAraNi kAraNi
kAmAvi mOkini vAkini yAmaLai
mAmAyi pArvathi thEvigu NAthari – umaiyALthan
nAthAkru pAkara thEsikar thEsika
vEthAka mEyaruL thEvarkaL thEvanal
eesAsa dApara mEsarsar vEsuri – murukOnE
thEnArmo zheevaLi nAyaki nAyaka
vAnAdu LOrthozhu mAmayil vAkana
sENALu mAninma nOkara mAkiya – maNavALA
seerpAtha sEkara nAkavu nAyinan
mOkAvi kAravi dAykeda Odave
seerAka vEkalai yAlunai Othavum – aruLvAyE
pENArkaL neerathi dAama NOrkaLai
chUrAdi yEkazhu meethini lERida
kUnAna meenani dERida kUdalil – varuvOnE
pErANmai yALani sAsarar kOniru
kURAka vALitho dUragu nAyagan
pUvAya nAraNan mAyani rAgavan – marukOnE
vANALpa dAvaru chUrarkaL mALave
sENAdu LOravar veedathi dERida
kOnAka vEvaru nAthagu rUpara – kumarEsA
vAsAma kOsara mAkiya vAsaka
thEsAthi yOravar pAthama thEthozha
pAsAvi nAsaka nAkavu mEviya – perumALE.
English Easy Version
gnAnA vibUshaNi kAr aNi kAraNi
kAmA vimOkini vAkini yAmaLai
mA mAyi pArvathi thEvi guNAthari – umaiyAL than
nAthA krupAkara thEsikar thEsika
vEthAkamE aruL thEvarkaL thEva nal
eesA sadA paramEsar sarvEsuri – murukOnE
thEn Ar mozhee va(L)Li nAyaki nAyaka
vAn nAdu uLOr thozhu mA mayil vAkana
sEN ALum mAnin manOkaram Akiya – maNavALA
seerpAtha sEkaran Akavu nAyinan
mOkA vikAra vidAykeda Odave
seerAkavE kalaiyAl unai Othavum – aruLvAyE
pENArkaL neeRu athu idA amaNOrkaLai
chUr AdiyE kazhu meethinil ERida
kUn Ana meenan idERida kUdalil – varuvOnE
pEr ANmaiyALan nisAsarar kOn iru
kURAka vALi thodU ragunAyagan
pU vAyan nAraNan mAyan irAgavan – marukOnE
vAzh nAL padA varu chUrarkaL mALavE
sEN nAdu uLOr avar veedathu eedERida
kOn AkavE varu nAtha kurU para – kumarEsA
vAsA makOsaramAkiya vAsaka
thEsa AthiyOr avar pAtham athE thozha
pAsA vinAsakanAkavum mEviya – perumALE.