Thiruppugal 1163 Tharanimisai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் – தனதான
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் – பதுவாயுந்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் – வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
சிதறவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் – அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் – கழல்தாராய்
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்
கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் – மகிழ்வாகிச்
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் – தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்
சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் – கதிர்வேலா
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்
சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் – தனதான
தரணி மிசை அ(ன்)னையினிட உந்தியின் வந்து உகு
துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில்
தசை உதிர(ம்) நிண(ம்) நிறைய அங்கமும் தங்க – ஒன்பது வாயும்
தரு கரமொடு இனிய பதமும் கொ(ண்)டு அங்கு ஒன்பதும்
பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன்
தநயன் என நடை பழகி மங்கை தன் சிங்கியின் – வசமாகி
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின்
கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் – அயர்வாகி
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன்
சுடலை மிசை எரியில் இட வெந்து பின் சிந்திடும்
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட – பைங்கழல் தாராய்
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும்
கழுகு கருடன்நயனம் இது கண்டு கொண்டு அம்பரம்
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் – மகிழ்வாகி
சின அசுரர் உடலம் அது தின்று தின்று இன்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் – தவ மோத
சர வரிசை விடு குமர அண்டர் தம் பண்டு உறும்
சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன்
சது(ர்) முகன் அடி பரவ மண்டு வெம்ச(ம)ம் பொரும் – கதிர் வேலா
சக(ம்) முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும்
தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும்
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் – பெருமாளே.
English
tharaNimisai anaiyinida vundhiyin vandhugun
thuLi payaRu kazhal iniya andamung koNdadhin
dhasaiyudhira niNa niRaiya angamun thangaon – badhu vAyun
tharukaramod iniya padhamung kodang onbadhum
perugi orupadhin avani vandhu kaNdanbudan
thanayanena nadai pazhagi mangai than singiyin – vasamAgi
thirigi udal vaLaiya nadai dhandudan sendru pin
kidai enavu maruvi manai mundhivandh anthakan
sidhaRa uyir piNamenave maindharum bandhuvum – ayarvAgi
jedamidhanai edum eduminendru koNdanbudan
sudalai misai eriyinida vendhupin chinthidun
jenanamidhu thavira iruthaNdaiyung koNdapaing – kazhalthArAy
seruvedhirum asurarkiLai manga engengaNung
kazhu garudan ayanamidhu kaNdukoN dambaram
thiriya migu alagaiyudan vengaNan thangaLin – magizhvAgi
sina asurar udalamadhu thindru thindrinbudan
dumu dumuda dumu dumuda duNduduN duNduduN
thimilai paRai muzhavu thudi pambaiyum sangamun – thavamOdha
sara varisaividu kumara aNdar tham paNduRum
siraiyai vida varumuruga endru vandhindhiran
chathumukanum adiparava maNdu venjam porung – kadhirvElA
jagamuzhudhu madaiya amudhuNdidung koNdalun
theri ariyamudiyin aravangaLun thingaLum
jalamidhazhi aNiyumoru sankaran thandhidum – perumALE.
English Easy Version
dharaNimisai anaiyinida vundhiyin vandhugum
thuLi payaRu kazhal iniya andamung koNdadhin
dhasaiyudhira niNa niRaiya angamun thanga – onbadhu vAyun
tharukaramod iniya padhamung kodang onbadhum
Perugi orupadhin avani vandhu kaNdanbudan
Thanayanena nadai pazhagi mangai than singiyin – vasamAgi
thirigi udal vaLaiya nadai dhandudan sendru pin
kidai enavu maruvi manai mundhivandh anthakan
sidhaRa uyir piNamenave maindharum bandhuvum – ayarvAgi
jedamidhanai edum eduminendru koNdanbudan
sudalai misai eriyinida vendhupin chinthidum
jenanamidhu thavira iruthaNdaiyung koNdapaing – kazhalthArAy
seruvedhirum asurarkiLai manga engengaNung
kazhu garudan ayanamidhu kaNdukoN dambaram
Thiriya migu alagaiyudan vengaNan thangaLin – magizhvAgi
sina asurar udalamadhu thindru thindrinbudan
dumu dumuda dumu dumuda duNduduN duNduduN
thimilai paRai muzhavu thudi pambaiyum sangamun – thavamOdha
sara varisaividu kumara aNdar tham paNduRum
siraiyai vida varumuruga endru vandhu indhiran
chathumukanum adiparava maNdu venjam porung – kadhirvElA
jagamuzhudhu madaiya amudhuNdidung koNdalun
theri ariyamudiyin aravangaLun thingaLum
jalamidhazhi aNiyumoru sankaran thandhidum – perumALE