Thiruppugal 1164 Thananjchatrukulungka
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
தனந்தத்தத் தனந்தத்தத் – தனதான
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
சதங்கைக்கற் சிலம்பொத்திக் – கையில்வீணை
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்
சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் – சரவேலால்
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
தினந்தெட்டிக் கடன்பற்றிக் – கொளுமாதர்
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
சிவம்பெற்றுத் தவம்பற்றக் – கழல்தாராய்
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் – டியல்தாளந்
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்
தகண்டத்தர்க் குடன்பட்டுற் – றசுராரைச்
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
சிரந்தத்தப் பிளந்துட்கக் – கிரிதூளாச்
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
தனந்தத்தத் தனந்தத்தத் – தனதான
தனம் சற்றுக் குலுங்கப் பொன் கலன்கள் பட்டு இலங்கப் பொன்
சதங்கைக் கல் சிலம்பு ஒத்திக் – கையில் வீணை
ததும்ப கை குழந்தைச் சொல் பரிந்து அற்புக்கு இதங்கப் பொன்
சரம் சுற்றிட்டு இணங்கக் கண் – சர வேலால்
தினம் பித்திட்டு இணங்கிச் சொல் கரம் கட்டிப் புணர்ந்திட்டுத்
தினம் தெட்டிக் கடன் பற்றிக் – கொ(ள்)ளு மாதர்
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்கக் குணம் செற்றுச்
சிவம் பெற்றுத் தவம் பற்றக் – கழல் தாராய்
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் – இயல் தாளம்
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்கு உட்கு அயர்ந்து
உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு – உற்ற அசுராரைச்
சினம் தத்திக் கொளுந்தக் கைச் சரம் தொட்டுச் சதம் பொர்ப்பைச்
சிரம் தத்த பிளந்து உட்கக் – கிரி தூளா(கி)ச்
செகம் திக்குச் சுபம் பெற்றுத் துலங்க பொர்க் களம் புக்குச்
செயம் பற்றிக் கொ(ள்)ளும் சொக்கப் – பெருமாளே.
English
thananjchatRuk kulungappoR kalankadpat tilangappoR
chathangaikkaR chilampoththik – kaiyilveeNai
thathumpakkaik kuzhanthaicchoR parinthaRpuk kithangappoR
charamchutRit tiNangakkat – charavElAl
thinampiththit tiNangicchoR karangattip puNarnthittuth
thinanthettik kadanpatRik – koLumAthar
silampaththit RirinthutRit tavampukkak kuNamchetRuc
chivampetRuth thavampatRak – kazhalthArAy
thananthaththath thananthaththath thaduNduttut tidiNdittid
dadaNdattat timiNduttut – tiyalthALan
thakunthoththith thiminthiththith thavaNdaikkut kayarnthukkath
thakaNdaththark kudanpattut – RasurAraic
chinanthaththik koLunthakkaic charanthottuc chathamporppaic
chiranthaththap piLanthutkak – kirithULAc
chekanthikkuc chupampetRuth thulangappork kaLampukkuc
cheyampatRik koLumchokkap – perumALE.
English Easy Version
thanam chatRuk kulungap pon kalankaL pattu ilangap pon
sathangaik kal silampu oththik – kaiyil veeNai
Thathumpa kai kuzhanthaic chol parinthu aRpukku ithangap pon
charam sutRittu iNangak kaN – chara vElAl
thinam piththittu iNangic chol karam kattip puNarnthittuth
thinam thettik kadan patRik – ko(L)Lu mAthar
silampaththil thirinthu utRittu avam pukkak kuNam setRuc
chivam petRuth thavam patRak – kazhal thArAy
thananthaththath thananthaththath thaduNduttut
tidiNdittit tadaNdattat timiNduttud – iyal thALam
thakunthoththith thiminthiththith thavaNdaikku udku ayarnthu
Ukka thaku aNdarththarkku udan pattu – utRa asurAraic
chinam thaththik koLunthak kaic charam thottuc chatham porppaic
chiram thaththa piLanthu utkak kiri – thULA(ki)c
chekam thikkuc chupam petRuth thulanga pork kaLam pukkuc
cheyam patRik ko(L)Lum sokkap – perumALE.