திருப்புகழ் 1165 நகரம் இரு பாதமாகி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1165 Nagaramirupadhamagi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனதன தான தான தனனதன தான தான
தனனதன தான தான – தனதான

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
நடுசிகர மாகி வாய்வ – கரமாகி

நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி
நமசிவய மாமை யாகி – எழுதான

அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்
அறிவிலறி வான பூர – ணமுமாகும்

அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
மருவுமவ தான போதம் – அருள்வாயே

குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது – தனியூருங்

குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு
குலவுதிரை சேரு மாது – தனைநாடி

அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமண மேசெய் தேக – வலைதேடி

அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்
அசபைசெகர் சோதி நாத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனதன தான தான தனனதன தான தான
தனனதன தான தான – தனதான

நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி மார்பு
நடு சிகரம் ஆகி வாய் – வகரமாகி

நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி
நமசிவய மாமை ஆகி – எழு(த்) தான

அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன்
அறிவில் அறிவான – பூரணமும் ஆகும்

அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி
மருவும் அவதான போதம் – அருள்வாயே

குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி
குறை அகல வேலை மீது – தனி ஊரும்

குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு
குலவு திரை சேரும் மாது – தனை நாடி

அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி
அரிய மணமே செய்து ஏகு – அவ்வலை தேடி

அறு முக வன் மீகரான பிறவி யம ராசை வீசும்
அசபை செகர் சோதி நாத – பெருமாளே.

English

nakaramiru pAtha mAki makaravayi RAki mArpu
nadusikara mAki vAyva – karamAki

nathimudiya sAra mAki uthayathiru mEni yAki
namasivaya mAmai yAki – ezhuthAna

akaravuka rEtha rOma sakara vuNar vAna cUran
aRivilaRi vAna pUra – NamumAkum

athanaiadi yEnum Othi ithayakama lAlai yAki
maruvumava thAna pOtham – aruLvAyE

gukanumaru LANmai kUra makaramenu sApa thAri
kuRaiyakala vElai meethu – thaniyUrum

kuzhavivadi vAka vEnam paratharthava mAka meeRu
kulavuthirai sEru mAthu – thanainAdi

akilavula kOrkaL kANa athisayama thAka mEvi
ariyamaNa mEsey thEka – valaithEdi

aRumukavan meeka rAna piRaviyama rAsai veesum
asapaisekar jOthi nAtha – perumALE.

English Easy Version

nakaram iru pAtha mAki makaravayi RAki mArpu
nadusikara mAki vAy – vakaramAki

nathimudiya sAra mAki uthayathiru mEni yAki
namasivaya mAmai yAki – ezhuthAna

akaravuka rEthar Oma sakara vuNar vAna cUran
aRivilaRi vAna pUraNamum – Akum

athanaiadi yEnum Othi ithayakama lAlai yAki
maruvumava thAna pOtham – aruLvAyE

gukanumaru LANmai kUra makaramenu sApa thAri
kuRaiyakala vElai meethu – thaniyUrum

kuzhavivadi vAkavE nam paratharthava mAka meeRu
kulavuthirai sEru mAthu – thanainAdi

akilavula kOrkaL kANa athisayama thAka mEvi
ariyamaNa mEsey thEka – valaithEdi

aRumukavan meeka rAna piRaviyama rAsai veesum
asapaisekar jOthi nAtha – perumALE,