திருப்புகழ் 1166 நரையொடு பல் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1166 Naraiyodupal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த – தனதான

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனமி ருட்டி நின்று கோலுற்று – நடைதோயா

நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைப டுத்து மிந்த மாயத்தை – நகையாதே

விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் – வினையோடு

மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு – வினவாதோ

உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
மொளிபெற நற்ப தங்கள் போதித்து
மொருபுடை பச்சை நங்கை யோடுற்று – முலகூடே

உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
முவரிவி டத்தை யுண்டு சாதித்து
முலவிய முப்பு ரங்கள் வேவித்து – முறநாகம்

அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து – மரவோடே

அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரியய னித்தம் வந்து பூசிக்கும்
அரநிம லர்க்கு நன்றி போதித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த – தனதான

நரை ஒடு பல் கழன்று தோல் வற்றி
நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோல் உற்று – நடை தோயா

நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து
நமது என மெத்த வந்த வாழ்வு உற்று
நடலை படுத்தும் இந்த மாயத்தை – நகையாதே

விரையொடு பற்றி வண்டு பாடு உற்ற
ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரும் மையைச் செறிந்த வேல்கட்கும் – வினையோடு

மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும்
இடைபடு சித்தம் ஒன்றுவேன் உற்று உன்
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு – வினவாதோ

உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும்
ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் – உலகூடே

உறு பலி பிச்சை கொண்டு போய் உற்றும்
உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் – உற நாகம்

அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்
அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல்வைத்தும் – அரவோடே

அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த
அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்
அர நிமலர்க்கு நன்று போதித்த – பெருமாளே

English

naraiyodu paR kazhandru thOl vatri
nadai aRa meththa nondhu kAleyththu
nayanam irutti nindru kOlutru – nadai thOyA

nazhuvum vidakkai OndrupOl vaiththu
namadhena meththa vandha vAzhvutru
nadalai paduththum indha mAyaththai – nagaiyAdhE

viraiyodu patri vaNdu pAdutra
mrigamadham appi vandha Odhikku
miLiru maiyaich cherindha vElgatkum – vinaiyOdu

migu kavinittu nindra mAdharkkum
idaipadu chiththam ondruvEn utrun
vizhumiya poRpadhangaL pAdaRku – vinavAdhO

uraiyodu sotrerindha mUvarkkum
oLipeRa naRpadhangaL bOdhiththum
orupudai pachchai nangaiyOd utrum – ulagUdE

uRubali pichchai koNdu pOyutrum
uvari vidaththai uNdu sAdhiththum
ulaviya muppurangaL vEviththum – uRanAgam

araiyodu katti andhamAy vaiththum
avirsadai vaiththa gangaiyOd okka
azhagu thiruththi indhu mEl vaiththum – aravOdE

aRugodu nochchi thumbai mElvaiththa
ariaya niththam vandhu pUjikkum
ara nimalarkku nandri bOdhiththa – perumALE.

English Easy Version

naraiyodu paR kazhandru thOl vatri
nadai aRa meththa nondhu kAleyththu
nayanam irutti nindru kOlutru – nadai thOyA

nazhuvum vidakkai OndrupOl vaiththu
namadhena meththa vandha vAzhvutru
nadalai paduththum indha mAyaththai – nagaiyAdhE

viraiyodu patri vaNdu pAdutra
mrigamadham appi vandha Odhikkum
miLiru maiyaich cherindha vElgatkum – vinaiyOdu

migu kavinittu nindra mAdharkkum
idaipadu chiththam ondruvEn utrun
vizhumiya poRpadhangaL pAdaRku – vinavAdhO

uraiyodu sotrerindha mUvarkkum
oLipeRa naRpadhangaL bOdhiththum
orupudai pachchai nangaiyOd utrum – ulagUdE

uRubali pichchai koNdu pOyutrum
uvari vidaththai uNdu sAdhiththum
ulaviya muppurangaL vEviththum – uRanAgam

araiyodu katti andhamAy vaiththum
avirsadai vaiththa gangaiyOd okka
azhagu thiruththi indhu mEl vaiththum – aravOdE

aRugodu nochchi thumbai mElvaiththa
ariaya niththam vandhu pUjikkum
ara nimalarkku nandri bOdhiththa – perumALE