Thiruppugal 1167 Nimirndhamudhugu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
தனந்த தனனந் தனந்த – தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்து – தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
நினைந்த மதியுங் கலங்கி – மனையாள்கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
உறைந்த உயிருங் கழன்று – விடுநாள்முன்
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து – மகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து – முதுசூரன்
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
சினங்க ழுகொடும் பெருங்கு – ருதிமூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து – பொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
அணங்கை மணமுன் புணர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
தனந்த தனனந் தனந்த – தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்து – தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங்கு இருண்டு
நினைந்த மதியுங் கலங்கி – மனையாள் கண்டு
மிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து
உறைந்த உயிருங் கழன்று – விடுநாள்முன்
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து – மகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து – முதுசூரன்
சிரம் கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
சினங் கழுகொடும் – பெருங்குருதிமூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து – பொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
அணங்கை மணமுன் புணர்ந்த – பெருமாளே.
English
nimirntha muthukum kuninthu siRantha mukamum thirangi
niRaintha vayiRum carinthu – thadiyUNi
nekizhnthu sadalam thaLarnthu viLangu vizhiyan giruNdu
ninaintha mathiyum kalangi – manaiyALkaN
dumizhnthu palarum kadinthu siRantha viyalum peyarnthu
uRaintha uyirum kazhanRu – vidunALmun
ukanthu manamum kuLirnthu payankoL tharumam purinthu
odungi ninaiyum paNinthu – makizhvEnO
thiminthi yenaveng kaNangaL kuNangar palavum kuzhumpi
thiraNda sathiyum purinthu – muthucUran
siramkai muzhuthum kudainthu niNangkoL kudalun thoLainthu
sinangka zhukodum perumku – ruthimUzhki
amizhnthi mikavum piNangaL ayinRu makizhkoNdu maNda
adarntha ayilmun thuranthu – poruvELE
alanga lenaveN kadampu punainthu puNarum kuRinji
aNangai maNamun puNarntha – perumALE.
English Easy Version
nimirntha muthukum kuninthu siRantha mukamum thirangi
niRaintha vayiRum carinthu – thadiyUNi
nekizhnthu sadalam thaLarnthu viLangu vizhiyan giruNdu
ninaintha mathiyum kalangi – manaiyAL kaNdumizhnthu
palarum kadinthu siRantha viyalum peyarnthu
uRaintha uyirum kazhanRu – vidunALmun
ukanthu manamum kuLirnthu payankoL tharumam purinthu
odungi ninaiyum paNinthu – makizhvEnO
thiminthi yenaveng kaNangaL kuNangar palavum kuzhumpi
thiraNda sathiyum purinthu – muthucUran
siramkai muzhuthum kudainthu niNangkoL kudalun thoLainthu
sinangka zhukodum perumkuruth – imUzhki
Amizhnthi mikavum piNangaL ayinRu makizhkoNdu maNda
adarntha ayilmun thuranthu – poruvELE
alanga lenaveN kadampu punainthu puNarum kuRinji
aNangai maNamun puNarntha – perumALE.