திருப்புகழ் 1168 நிருதரார்க்கு ஒரு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1168 Nirudhararkkuoru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன – தனதான

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய – விறலான

நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினி – யுடனேதான்

தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடியு – னடியார்வாழ்

சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவ – தொருநாளே

தருவி னாட்டர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு
தவசி னாற்சிவ னீபோய் வானவர் – சிறைதீரச்

சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறா யேபட – விழமோதென்

றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம – ரடலாகி

அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன – தனதான

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய – விறலான

நெடிய வேற்படையானே ஜேஜெய
எனஇராப்பகல் தானே நான்மிக
நினது தாள் தொழு மாறே தான் இனி – யுடனேதான்

தரையின்ஆழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் – அடியார்வாழ்

சபையி னேற்றி இன் ஞானா போதமும்
அருளி ஆட்கொளு மாறே தானது
தமியனேற்கு முனே நீ மேவுவது – ஒருநாளே

தருவி னாட்டரசாள்வான் வேணுவினுருவ
மாய்ப்பல நாளே தானுறு
தவசினால் சிவன் நீபோய் வானவர் – சிறைதீர

சகல லோக்கியமே தான் ஆளுறும்
அசுர பார்த்திபனோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறாயேபட – விழ மோதென்று

அருள ஏற்று அமரோடே போய்
அவருறையு மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் – அடலாகி

அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டு அரனார்பால் மேவிய
அதி பராக்ரம வீரா வானவர் – பெருமாளே.

English

nirudharArk koru kAlA jE jeya
surargaL Eththidyu vElA jE jeya
nimalanArk koru bAlA jE jeya – viRalAna

nediya vER padaiyAnE jE jeya
ena irAp pagal thAnE nAn miga
ninadhu thAL thozhumARE thAnini – udanEthAn

tharaiyi nAzhth thirai EzhE pOlezhu
piRavi mAk kadalUdE nAnuRu
savalai theerththuna thALE sUdi yun – adiyAr vAzh

sabaiyin Etri innyAnA bOdhamum
aruLi AtkoLu mARE thAnadhu
thamiyanERku munE nee mEvuvadhu – orunALE

tharuvinAt arasALvAn vENuvin
uruvamAyp pala nALE thAnuRu
thava sinAR siva nee pOy vAnavar – siRaitheera

sakala lOkkiya mEdhA nALuRum
asura pArthiba nOdE sEyavar
thamarai vERkodu neeRA yEpada – vizhamOdhendru

aruLa EtramarOdE pOyavar
uRaiyu mAggiriyOdE thAnaiyum
azhiya veezhththedhir sUrOdE – amar adalAgi

amaril veettiyum vAnOr thAnuRu
siRaiyai meet aranAr pAl mEviya
athi parAkrama veerA vAnavar – perumALE.

English Easy Version

nirudharArk koru kAlA jE jeya
surargaL Eththidyu vElA jE jeya
nimalanArk koru bAlA jE jeya – viRalAna

nediya vER padaiyAnE jE jeya
ena irAp pagal thAnE nAn miga
ninadhu thAL thozhumARE thAnini – udanEthAn

tharaiyi nAzhth thirai EzhE pOlezhu
piRavi mAk kadalUdE nAnuRu
savalai theerththu una thALE sUdi un – adiyAr vAzh

sabaiyin Etri innyAnA bOdhamum
aruLi AtkoLu mARE thAn adhu
thamiyanERku munE nee mEvuvadhu – orunALE

tharuvinAt arasALvAn vENuvin
uruvamAyp pala nALE thAnuRu
thava sinAR siva nee pOy vAnavar – siRaitheera

sakala lOkkiya mEdhA nALuRum
asura pArthiba nOdE sEyavar
thamarai vERkodu neeRA yEpada – vizhamOdhendru

aruLa EtramarOdE pOy
avaruRaiyu mAggiriyOdE thAnaiyum
Azhiya veezhththedhir sUrOdE amar – adalAgi

amaril veettiyum vAnOr thAnuRu
siRaiyai meet aranAr pAl mEviya
athi parAkrama veerA vAnavar – perumALE.