திருப்புகழ் 1171 பகல்மட்க (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1171 Pagalmatka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன – தனதான

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
நவரத்நப் பத்தித் தொடைநக
நுதிபட்டிட் டற்றுச் சிதறிட – இதழூறல்

பருகித்தித் திக்கப் படுமொழி
பதறக்கைப் பத்மத் தொளிவளை
வதறிச்சத் திக்கப் புளகித – தனபாரம்

அகலத்திற் றைக்கப் பரிமள
அமளிக்குட் சிக்கிச் சிறுகென
இறுகக்கைப் பற்றித் தழுவிய – அநுராக

அவசத்திற் சித்தத் தறிவையு
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு – துணர்வேனோ

இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
முரணிர்த்தப் பச்சைப் புரவியு
மிரவிக்கைக் குக்டத் துவசமு – மறமாதும்

இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக்கற் பித்துத் திரிபவர் – பெருவாழ்வே

புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
கலகச்செற் றச்சட் சமயிகள்
புகலற்குப் பற்றற் கரியதொ – ருபதேசப்

பொருளைப்புட் பித்துக் குருபர
னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி
புனையப்பர்க் கொப்பித் தருளிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன – தனதான

பகல் மட்கச் செக்கரப் ப்ரபை விடு
நவ ரத்னப் பத்தித் தொடை நக
நுதி பட்டுட்டு உற்றுச் சிதறிட – இதழ் ஊறல்

பருகித் தித்தக்கப் படு மொழி
பதறக் கைப் பத்மத்து ஒளி வளை
வதறிச் சத்திக்க புளகித – தன பாரம்

அகலத்தில் தைக்கப் பரிமள
அமளிக்குள் சிக்கிச் சிறுகு என
இறுகக் கைப்பற்றித் தழுவிய – அநுராக

அவசத்தில் சித்தத்து அறிவையும்
மிக வைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது – உணர்வேனோ

இகல் வெற்றிச் சத்திக் கிரணமும்
முரண் நிர்த்தப் பச்சைப் புரவியும்
இரவிக் கைக் குக்(கு)டத் துவசமும் – மற மாதும்

இடை வைத்துச் சித்ரத் தமிழ் கொடு
கவி மெத்தச் செப்பிப் பழுது அற
எழுதிக் கற்பித்துத் திரிபவர் – பெரு வாழ்வே

புகலில் தர்க்கிட்டுப் ப்ரமை உறு
கலகச் செற்றச் சட் சமயிகள்
புகலற்குப் பற்றற்கு அரியது ஒர் – உபதேசப்

பொருளைப் புட்பித்துக் குருபரன்
என முக்கண் செக்கர்ச் சடை மதி
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய – பெருமாளே.

English

pakalmatkac chekkarp prapaividu
navarathnap paththith thodainaka
nuthipattit tatRuc chithaRida – ithazhURal

parukiththith thikkap padumozhi
pathaRakkaip pathmath thoLivaLai
vathaRicchath thikkap puLakitha – thanapAram

akalaththit Raikkap parimaLa
amaLikkut cikkic chiRukena
iRukakkaip patRith thazhuviya – anurAka

avasaththiR chiththath thaRivaiyu
mikavaiththup potRith therivaiyar
vasamvittarc chikkaik korupozhu – thuNarvEnO

ikalvetRic chaththik kiraNamu
muraNirththap pacchaip puraviyu
miravikkaik kukdath thuvasamu – maRamAthum

idaivaiththuc chithrath thamizhkodu
kavimeththac cheppip pazhuthaRa
ezhuthikkaR piththuth thiripavar – peruvAzhvE

pukalitRark kittup pramaiyuRu
kalakacchet Racchat chamayikaL
pukalaRkup patRaR kariyatho – rupathEsap

poruLaipput piththuk gurupara
nenamukkat chekkarc chadaimathi
punaiyappark koppith tharuLiya – perumALE.

English Easy Version

pakal matkac chekkarp prapai vidu
nava rathnap paththith thodai naka
nuthi pattittu atruch chithaRida – ithazh URal

parukith thiththikkap padu mozhi
pathaRak kaip pathmaththu oLi vaLai
vathaRic chaththikka puLakitha – thana pAram

akalaththil thaikkap parimaLa
amaLikkuL sikkic chiRuku ena
iRukak kaippatRith thazhuviya – anurAka

Avasaththil chiththaththu aRivaiyum
mika vaiththup potRith therivaiyar
vasam vittu arcchikkaikku oru pozhuthu – uNarvEnO

ikal vetRic chaththik kiraNamum
muraN nirththap pacchaip puraviyum
iravik kaik kuk(ku)dath thuvasamum – maRa mAthum

idai vaiththuc chithrath thamizh kodu
kavi meththac cheppip pazhuthu aRa
ezhuthik kaRpiththuth thiripavar – peru vAzhvE

pukalil tharkkittup pramai uRu
kalakac chetRas sat chamayikaL
pukalaRkup patRaRku ariyathu or – upathEsap

poruLaip pudpiththuk guruparan
Ena mukkaN sekkarc chadai mathi
punai apparkku oppiththu aruLiya – perumALE,