திருப்புகழ் 1172 பத்தித் தரள (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1172 Paththiththarala3

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன – தனதான

பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை
பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ – ருயர்தாளப்

பத்மத்திய ரற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்திய ரிக்குச் சிலையுரு – விலிசேருஞ்

சித்தத்தரு ணர்க்குக் கனியத
ரப்புத்தமு தத்தைத் தருமவர்
சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை – நுதலார்தந்

தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தரு ளற்றுற் றுனதடி
சிக்கிட்டிடை புக்கிட் டலைவது – தவிராதோ

மத்தப்பிர மத்தக் கயமுக
னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
மட்டிட்டஇ ரத்தக் குருதியில் – விளையாட

மற்றைப்பதி னெட்டுக் கணவகை
சத்திக்கந டிக்கப் பலபல
வர்க்கத்தலை தத்தப் பொருபடை – யுடையோனே

முத்திப்பர மத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி
முற்பட்டுழை பெற்றுத் தருகுற – மகள்மேல்மால்

முற்றித்திரி வெற்றிக் குருபர
முற்பட்டமு ரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன – தனதான

பத்தித் தரளக் கொத்து ஒளிர் வரி
பட்டப் புளகச் செப்பு இள முலை
பட்டு இட்டு எதிர் கட்டுப் பரதவர் – உயர் தாளப்

பத்மத்தியர் அற்புக் கடுகடு
கண் சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்தியர் இக்குச் சிலை உருவு – இலி சேரும்

சித்தத் தருணர்க்குக் கனி அதரப்
புத்தமுதத்தைத் தரும் அவர்
சித்ரக் கிரணப் பொட்டு இடு பிறை – நுதலார் தம்

தெட்டில் படு கட்டக் கனவிய
பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது – தவிராதோ

மத்தப் பிரமத்தக் கய முகனைக்
குத்தி மிதித்துக் கழுதுகள்
மட்டிட்ட இரத்தக் குருதியில் – விளையாட

மற்றைப் பதினெட்டுக் கண வகை
சத்திக்க நடிக்கப் பல பல
வர்க்கத் தலை தத்தப் பொரு படை – உடையோனே

முத்திப் பரமத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவ முனி
முற்பட்டு உழை பெற்றுத் தரு குற – மகள் மேல் மால்

முற்றத் திரி வெற்றிக் குருபர
முற்பட்ட முரட்டுப் புலவனை
முட்டைப் பெயர் செப்பிக் கவி பெறு – பெருமாளே.

English

paththiththara Lakkoth thoLirvari
pattappuLa kacchep piLamulai
pattittethir kattup parathava – ruyarthALap

pathmaththiya raRpuk kadukadu
katchaththiyar meththath thiraviya
patchaththiya rikkuc chilaiyuru – vilisErum

chiththaththaru Narkkuk kaniyatha
rappuththamu thaththaith tharumavar
chithrakkira Nappot tidupiRai – nuthalArthan

thettiRpadu kattak kanaviya
patchaththaru LatRut Runathadi
chikkittidai pukkit talaivathu – thavirAthO

maththappira maththak kayamuka
naikkuththimi thiththuk kazhuthukaL
mattittai raththak kuruthiyil – viLaiyAda

matRaippathi nettuk kaNavakai
saththikkana dikkap palapala
varkkaththalai thaththap porupadai – yudaiyOnE

muththippara maththaik karuthiya
siththaththinil mutRath thavamuni
muRpattuzhai petRuth tharukuRa – makaLmElmAl

mutRiththiri vetRik gurupara
muRpattamu rattup pulavanai
muttaippeyar seppik kavipeRu – perumALE.

English Easy Version

paththith tharaLak koththu oLir vari
pattap puLakac cheppu iLa mulai
pattu ittu ethir kattup parathavar – uyar thALap

pathmaththiyar aRpuk kadukadu
kaN saththiyar meththath thiraviya
patchaththiyar ikkuc chilai uruvu – ili sErum

siththath tharuNarkkuk kani atharap
puththamuthaththaith tharum avar
chithrak kiraNap pottu idu piRai – nuthalAr tham

thettil padu kattak kanaviya
patchaththu aruL atRu utRu unathu adi
chikkittu idai pukkittu alaivathu – thavirAthO

maththap piramaththak kaya mukanaik
kuththi mithiththuk kazhuthukaL
mattitta iraththak kuruthiyil – viLaiyAda

matRaip pathinettuk kaNa vakai
saththikka nadikkap pala pala
varkkath thalai thaththap poru padai – udaiyOnE

muththip paramaththaik karuthiya
siththaththinil mutRath thava muni
muRpattu uzhai petRuth tharu kuRa – makaL mEl mAl

mutRith thiri vetRik gurupara
muRpatta murattup pulavanai
muttaip peyar seppik kavi peRu – perumALE