திருப்புகழ் 1173 பரதவித புண்டரிக (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1173 Paradhavidhapundariga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன – தனதான

பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்
பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் – கொடிதாய

பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் – ஒருகாம

விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்
ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ
விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய – தமிழ்நூலின்

விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில்
விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது – மொருநாளே

உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி
யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் – உறிதாவும்

ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு – மதிகோபக்

கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை
கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி – பிறியாத

கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு
கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன – தனதான

பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள்
அமுது பொழியும் குமுத கீதப் பாட்டிகள்
பலர் பொருள் கவர்ந்து இடைக் கலாம் இட்டு ஓட்டிகள் – கொடிது ஆய

பழுது ஒழிய அன்பும் உடையாரைப் போல் சிறிது
அழுது அழுது கண் பிசையும் ஆசைக் கூற்றிகள்
பகழி என வந்து படு பார்வைக் கூற்றினர் – ஒரு காம

விரகம் விளைகின்ற கழு நீரைச் சேர்த்து அகில்
ம்ருகமத மிகுந்த பனி நீரைத் தேக்கியெ
விபுதர் பதி அங்க தலம் மேவிச் சாற்றிய – தமிழ் நூலின்

விததி கமழ் தென்றல் வர வீசிக் கோட்டிகள்
முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில்
விடி அளவு நைந்து உருகுவேனைக் காப்பதும் – ஒரு நாளே

உரக பணை பந்தி அபிஷேகத் தாற்றிய
சகல உலகும் தரும் அமோகப் பார்ப்பதி
உடல் உருவு பங்கு உடைய நாகக் காப்பனும் – உறி தாவும்

ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய்க் குல
மகளிர் சிறு தும்பு கொ(ண்)டு மோதிச் சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும் – அதி கோபக்

கர விகட வெம் கட கபோலப் போர்க் கிரி
கடவிய புரந்தரனும் வேளைப் போற்றுகை
கருமம் என வந்து தொழ வேதப் பால் பதி – பிறியாத

கடவுளை முனிந்து அமரர் ஊரைக் காத்து உயர்
கரவட க்ரவுஞ்ச கிரி சாயத் தோற்று எழு
கடல் என உடைந்த அவுணர் ஓடத் தாக்கிய – பெருமாளே.

English

parathavitha puNdarika pAthath thAttikaL
amuthupozhi yungkumutha keethap pAttikaL
palarporuLka varnthidaika lAmit tOttikaL – kodithAya

pazhuthozhiya anpumudai yAraip pORchiRi
thazhuthazhuthu kaNpisaiyu mAsaik kUtRikaL
pakazhiyena vanthupadu pArvaik kUtRinar – orukAma

virakamviLai kinRakazhu neeraic chErththakil
mrukamathami kunthapani neeraith thEkkiye
viputharpathi yangkathala mEvic chAtRiya – thamizhnUlin

vithathikamazh thenRalvara veesik kOttikaL
mulaikaLilvi zhunthupari thApath thAtRinil
vidiyaLavu nainthuruku vEnaik kAppathu – morunALE

urakapaNai panthiyapi shEkath thAtRiya
sakalavula kuntharuma mOkap pArppathi
yudanuruvu pangudaiya nAkak kAppanum – uRithAvum

orukaLavu kaNduthani kOpath thAykkula
makaLirsiRu thumpukodu mOthic chErththidum
u ralodutha vazhnthanava neethak kUtRanu – mathikOpak

karavikada vengkadaka pOlap pOrkkiri
kadaviyapu rantharanum vELaip pOtRukai
karumamena vanthuthozha vEthap pARpathi – piRiyAtha

kadavuLaimu ninthamara rUraik kAththuyar
karavadakra vunjakiri sAyath thOtRezhu
kadalenavu dainthavuNa rOdath thAkkiya – perumALE.

English Easy Version

paratha vitha puNdarika pAthaththu AttikaL
amuthu pozhiyum kumutha keethap pAttikaL
palar poruL kavarnthu idaik kalAm ittu OttikaL – kodithu Aya

pazhuthu ozhiya anpum udaiyAraip pOl siRithu
azhuthu azhuthu kaN pisaiyum Asaik kUtRikaL
pakazhi ena vanthu padu pArvaik kUtRinar – oru kAma

virakam viLaikinRa kazhu neeraic chErththu akil
mrukamatha mikuntha pani neeraith thEkkiye
viputhar pathi angka thalam mEvic chAtRiya – thamizh nUlin

vithathi kamazh thenRal vara veesik kOttikaL
mulaikaLil vizhunthu parithApaththu AtRinil
vidi aLavu nainthu urukuvEnaik kAppathum – oru nALE

uraka paNai panthi apishEkath thAtRiya
sakala ulakum tharum amOkap pArppathi
udan uruvu pangku udaiya nAkak kAppanum – uRi thAvum

oru kaLavu kaNdu thani kOpaththu Ayk kula
makaLir siRu thumpu ko(N)du mOthic chErththidum
uralodu thavazhntha navaneethak kUtRanum – athi kOpak

kara vikada vem kada kapOlap pOrk kiri
kadaviya purantharanum vELaip pOtRukai
karumam ena vanthu thozha vEthap pAl pathi – piRiyAtha

kadavuLai muninthu amarar Uraik kAththu uyar
karavada kravunjsa kiri sAyath thOtRu ezhu
kadal ena udaintha avuNar Odath thAkkiya – perumALE.