திருப்புகழ் 1174 பழுது அற ஓதி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1174 Pazhudhuaraodhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
தனதன தானத் தனந்த – தனதான

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருந்து – மதராசன்

பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
பரிதவி யாமெத்த நொந்து – மயல்கூர

அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
யவர்விழி பாணத்து நெஞ்ச – மறைபோய்நின்

றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற
னருள்வச மோஇப்ர மந்தெ – ரிகிலேனே

எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
யெனவொரு ஞானக் குருந்த – ருளமேவும்

இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த – தனியாண்மை

பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
புளகப டீரக் குரும்பை – யுடன்மேவும்

புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
புனமிசை யோடிப் புகுந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
தனதன தானத் தனந்த – தனதான

பழுது அற ஓதிக் கடந்து பகை வினை தீரத் துறந்து
பல பல யோகத்து இருந்து – மத ராசன்

பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து
பரிதவியா மெத்த நொந்து – மயல் கூர

அழுது அழுது ஆசைப் படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி
அவர் விழி பாணத்து நெஞ்சம் – அறை போய் நின்று

அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை
உன் தன் அருள் வசமோ இ ப்ரமம் – தெரிகிலேனே

எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை
என ஒரு ஞானக் குருந்தர் – உ(ள்)ளம் மேவும்

இரு உருவாகித் துலங்கி ஒரு கன தூணில் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த – தனி ஆண்மை

பொழுது இசையா விக்ரமன் தன் மருக புராரிக்கு மைந்த
புளக படீரக் குரும்பை – உடன் மேவும்

புயல் கரி வாழச் சிலம்பின் வனசர மானுக்கு உகந்து
புனம் மிசை ஓடிப் புகுந்த – பெருமாளே.

English

pazhuthaRa vOthik kadanthu pakaivinai theerath thuRanthu
palapala yOkath thirunthu – matharAsan

parimaLa pANath thayarnthu panaimada lUrthaR kisainthu
parithavi yAmeththa nonthu – mayalkUra

azhuthazhu thAsaip padunka Napinaya mAthark kirangi
yavarvizhi pANaththu nenja – maRaipOynin

Razhivathu yAnmuR payantha vithivasa mOmatRaiyunRan
aruLvasa mOipra manthe – rikilEnE

ezhutharu vEthaththu manRi muzhuthinu mAyniRku menthai
yenavoru njAnak kuruntha – ruLamEvum

iruvuru vAkith thulangi yorukana thUNiR piRanthu
iraNiyan mArpaip piLantha – thaniyANmai

pozhuthisai yAvikra manthan marukapu rArikku maintha
puLakapa deerak kurumpai – yudanmEvum

puyalkari vAzhac cilampin vanasara mAnuk kukanthu
punamisai yOdip pukuntha – perumALE.

English Easy Version

pazhuthu aRa Othik kadanthu pakai vinai theerath thuRanthu
pala pala yOkaththu irunthu – matha rAsan

parimaLa pANaththu ayarnthu panai madal UrthaRku isainthu
parithaviyA meththa nonthu – mayal kUra

azhuthu azhuthu Asaip padunkaN apinaya mAtharkku irangi
avar vizhi pANaththu nenjam – aRai pOy ninRu

Azhivathu yAn mun payantha vithi vasamO matRai
unthan aruL vasamO i pramam – therikilEnE

ezhutha aru vEthaththum anRi muzhuthinumAy niRkum enthai
Ena oru njAnak kurunthar – u(L)Lam mEvum

iru uruvAkith thulangi oru kana thUNil piRanthu
iraNiyan mArpaip piLantha – thani ANmai

pozhuthu isaiyA vikraman than maruka purArikku maintha
puLaka padeerak kurumpai – udan mEvum

puyal kari vAzhac cilampin vanasara mAnukku ukanthu
punam misai Odip pukuntha – perumALE.